தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி ஏதும் இல்லாமல் இருப்பதால் கடந்த சில நாட்களாக மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில்  தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட நிலையே காணப்படுகிறது. தற்போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் கடலோர மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் திருவள்ளூர் புதுச்சேரி கடலூர் காரைக்கால் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

நேற்றைய தினத்தை ஒப்பிட்டு பார்க்கையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மட்டுமே ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை பொருத்தவரையில் இன்று அதிக வெயிலை உணர முடிகிறது.

Read more : இந்த 4 விஷயத்தை மட்டும் தாம்பத்யத்தில் தவிர்த்து விடுங்கள்..! அடுத்த 4 விஷயம் பிறகு பார்க்கலாம்..!

கோடைக்காலம் முடிந்து தற்போது மழை தொடங்கி உள்ளது என நினைத்த இந்த தருணத்தில், மீண்டும் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.