தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் ஏமாமற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அதிக அளவில் விலை ஏற்றம் அடைந்த தங்கம் நேற்று சற்று விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமுகமாக உள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,240 ஆகவும், சவரன், ரூ.41,920 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,251 ஆகவும், சவரனுக்கு 88 ரூபாய் சரிந்து ரூ.42,008 ஆக உயர்வு அடைந்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,251 க்கு விற்கப்படுகிறது.
இந்த வாரத்தில் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. ஆனால், வெள்ளிக்கிழமை கிராமுக்கு 3 ரூபாய் மட்டும் குறைந்தது. இன்று மீண்டும் கிராமுக்கு 11 ரூபாய் கூடிவிட்டது. இதனால் நகைப்பிரியர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் ஏமாமற்றம் அடைந்துள்ளனர்.
வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.70 ஆக நீடிக்கிறது. வெள்ளி கிலோ ரூ.70 ஆயிரமாகத் தொடர்கிறது
