அம்பானி டிரைவர் ஒரு மாசம் எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா? பெரிய கம்பெனி வேலையிலும் கிடைக்காத வருமானம்
Ambani Driver Salary: உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டு டிரைவர் சம்பளம் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன முகேஷ் அம்பானி- நீதா அம்பானி ஆகிய இருவரும் உலக பணக்காரர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள். அம்பானி குடும்பத்தின் இன்னொரு பெருமை என்னவெனில், உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு அவர்களுடையது தான். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக இவர்களின் மாளிகை உள்ளது.
அம்பானி குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என சொன்னால் அது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது. ஆனால், முகேஷ் அம்பானியின் டிரைவர் கூட ஆடம்பரமாக வாழ்கிறார் என்றால் அது ஆச்சர்யம் தான். அவரின் ஒரு மாத சம்பளமே அதற்கு உதாரணம்.
முகேஷ் அம்பானியின் டிரைவராக இருப்பது ஒன்றும் ஈஸியான விஷயம் இல்லை. அம்பானி குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கையில் வேலை செய்ய அவருக்கு சூப்பர் டூப்பர் திறமை வேண்டும். அம்பானி வீட்டு டிரைவர் வேலைக்கு கூட கடினமான இன்ட்ர்வியூ உண்டு தெரியுமா? இதற்காகவே ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இன்ட்ர்வியூ செய்யப்பட்டு தான் வேலை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அது சரி இவ்வளவு சொன்னீங்க.. சம்பளம் எவ்வளவு கேட்கிறீர்களா? முகேஷ் அம்பானியின் டிரைவர் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 2 லட்சம் சம்பாதிக்கிறாராம். கொடுமை என்னவென்றால் பெரிய பெரிய கம்பெனியில் வேலை செய்யும் ஆட்கள் கூட முகேஷ் அம்பானி வீட்டு டிரைவர் சம்பளத்தை விடவும் குறைவான ஊதியம் தான் வாங்குகிறார்கள்.
இந்த சம்பளத்தை நியாயப்படுத்த முகேஷ் அம்பானியிடம் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் அவரிடம் இருப்பது எல்லாம் விலையுயர்ந்த கார்கள் தான். அதனால் தான் அதை ஓட்டும் திறமை வாய்ந்த அவருடைய டிரைவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சியால் யோகம் பெறும் 4 ராசிகள்.. உலகமே எதிர்த்தாலும் இவங்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை தான்
அம்பானி வீட்டில் வேலை செய்யும் தலைமை டிரைவருக்கு 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிற டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உங்க வீட்டின் ஏதோ ஒரு மூலையில் இந்த ஒரு அற்புத பொருளை வைத்தாலும் கூட போதும்.. கண்டிப்பா பணம் வந்து சேரும்