தங்கம் விலை கடந்த வாரம் பெரும் சரிவை நோக்கி சென்ற நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் பெரும் சரிவை நோக்கி சென்ற நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 20ரூபாயும், சவரணுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை நிலவரப்படி கிராம் ரூ.4,627க்கும், சவரண் ரூ.37,016க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 விலை உயர்ந்து, ரூ4,647 ஆகவும், சவரணுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்து ரூ.37,176க்கும் விற்கப்படுகிறது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4647ஆக விற்கப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் கடும் ஏற்ற, இறக்குத்துடன் இருந்தது. கடந்த வாரங்களாகவே தங்கத்தில் விலையில் இருந்த ஊசலாட்டம் கடந்த வாரமும் தொடர்ந்தது, கடந்த 3 வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,500 வரை குறைந்துள்ளது.

கடந்த 11ம் தேதி முதல் சனிக்கிழமை வரை தங்கம் கிராமுக்கு 53 ரூபாயும், சவரணுக்கு 424 ரூபாயும் குறைந்து, ஏறக்குறைய ரூ.36ஆயிரத்தை எட்டிவிட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளநிலையில் விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் தங்கம் வாங்குவதற்கு இது சரியான நேரமாகும். 


விலையில் தாக்கம் ஏற்படுத்தும் காரணிகள்

அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவதும், இந்த வாரம் அமெரிக்காவின் உற்பத்தி குறியீடு புள்ளிவிவரங்களும் தங்கத்தின் விலையில் பாதிக்கும் காரணிகளாகும்.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை எந்த அளவு உயர்த்துகிறது என்பதைப் பொறுத்து உலக நாடுகளின் கரன்ஸி மதிப்பும், தங்கத்தின் விலையில் நிலைத்தன்மையயும் முடிவு செய்யும். 

ஒருவேளை வட்டி உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்காவின் உற்பத்தி புள்ளிவிவரங்களும் சாதகமாக இருந்தாலும், முதலீடுகள் டாலரை நோக்கித் திரும்பும். 

இது தவிர ஐரோப்பிய யூனியன் வங்கியும் இந்த வாரம் கூடி வட்டி வீதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறது. சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறுமாநிலங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

இதனால், சீனாவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வருவதில் தாமதம் நிலவுகிறது.இவை அனைத்தும் தங்கத்தின் விலையில் இந்த வாரம் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசு அதிகரித்து, ரூ.61.30க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.600உயர்ந்து ரூ.61,300க்கு விற்கப்படுகிறது.