nirmala sitharaman: தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க தனது சொந்த திறமை, தனது பொருளாதார ஆலோசகர்கள் மீதான நம்பிக்கையை கைவிட்டு, வானில் உள்ள கிரகங்களை உதவிக்கு அழைக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க தனது சொந்த திறமை, தனது பொருளாதார ஆலோசகர்கள் மீதான நம்பிக்கையை கைவிட்டு, வானில் உள்ள கிரகங்களை உதவிக்கு அழைக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பேரண்டம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அந்தப் புகைப்படங்களை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ஓலா நிறுவனத்துக்கு ரூ.1.67 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி
நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பகிர்ந்த நாசா புகைப்படங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, “ இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், பணவீக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த திட்டங்களை அமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ, வானில் உள்ள வியாழன், சனி கிரகங்கள் பற்றித்தான் ஆர்வமாக இருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தது.
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: என்ன காரணம்? பெட்ரோல், டீசல் நிலை?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரமும், இதே விவகாரத்தில் நிர்மலா சீதாரமன் வெளியிட்ட புகைப்படத்தை பற்றி விமர்சித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “பணவீக்கம் 7.01 சதவீதமாக உயர்ந்திருக்கும்போது, வேலையின்மை 7.8சதவீதமாக அதிரித்துள்ளபோது நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூபிட்டர், ப்ளூட்டோ, யுரேனஸ் குறித்த புகைப்படங்களை வெளியிட்டதில் வியப்பு ஏதும் இல்லை.
நிதிஅமைச்சர் தன்னுடைய சொந்த திறமை மீதும், தன்னுடைய பொருளாதார ஆலோகர்கள் மீதும் நம்பிக்கையை கைவிட்டுவிட்டார். அதனால்தான் வானத்தில் உள்ள கிரகங்களை பொருளாதாரத்தை மீட்க அழைத்தார்.
விமானத்தையே தூக்கிச் செல்லும் திமிங்கல பெலுகா ஏர்பஸ் விமானம்: சென்னை விமானநிலையம் வந்தது ஏன்?
நிதிஅமைச்சர், புதிதாக தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.