ev fire india: எலெக்ட்ரானிக் ஸ்கூட்டர்களை புதிதாக அறிமுகம் செய்யத் தடை: மத்திய அரசு திடீர் உத்தரவு

ev fire india  : பேட்டரியில் இயங்கும் இரு சக்கரவாகனங்களை சந்தையில் புதிதாக எந்த நிறுவனமும் அறிமுகம் செய்ய மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ev fire india :  Electric vehicle makers told to halt two-wheeler launches

பேட்டரியில் இயங்கும் இரு சக்கரவாகனங்களை சந்தையில் புதிதாக எந்த நிறுவனமும் அறிமுகம் செய்ய மத்திய அரசு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆய்வுக் குழு

கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரானிக் பைக்குகள் தீப்பிடித்து எரியும் விபத்துகள் அதிகமாக நடந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கும்வரை எந்த நிறுவனமும் புதிதாக எந்த எலெக்ட்ரானிக் பைக்குகளையும் அறிமுகம் செய்ய வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ev fire india :  Electric vehicle makers told to halt two-wheeler launches

ஆலோசனை

கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரானிக் டூவீலர்கள் திடீரென்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதும், நிறத்தப்பட்டிருக்கும்வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஆலோசிக்க வாகன தயாரிப்பாளர்களுக்கு மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்துக்குப்பின் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின்  உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சமீபகாலமாக எலெக்ட்ரானிக் டூவீலர்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பயனாளிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கவும், தீப்பிடிப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காணவும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ev fire india :  Electric vehicle makers told to halt two-wheeler launches

அறிவுறுத்தல்

இந்த குழுவினர் அறிக்கை அளிக்கும்வரை புதிய எலெக்ட்ரானிக் டூவீலர்கள் எதையும் அறிமுகம் செய்யவேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் வாய்மொழியாக மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ ஆணையாக இதை வெளியிடவில்லை” எனத் தெரிவித்தார்.

எலெக்ட்ரானிக் டூவீலர்கள் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த பேட்சில் தாயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டதையடுத்து, ஓலா, ஒக்கினவா, பியூர் இவி ஆகிய நிறுவனங்கள் 7ஆயிரம் டூவீலர்களைத் திரும்ப்பபெற்றுள்ளன. 

ev fire india :  Electric vehicle makers told to halt two-wheeler launches

எலெக்ட்ரானிக் டூவீலர்கள் தயாரிப்பாளர்கள், மத்திய அரசுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின்புதான் டூவீலர்களை திரும்பப் பெறுவதாகநிறுவனங்கள் அறிவித்தன. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்குப் பின்பும், டூவீலர்களை வாபஸ் பெறாமல் இருந்தால், அதனால் விபத்து ஏதும் ஏற்பட்டால், டூவீலர் தாயாரிப்பு நிறுவனங்களுக்கு அபராதமும், வலுக்கட்டாயமாக வாகனங்களை திரும்பப் பெறவும் உத்தரவிடப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios