EPF வட்டி விகித உயர்வு நிதி அமைச்சக ஒப்புதல் பெற்ற பிறகு, 2023-24க்கான வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.

ஈபிஎஃப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO ​​சனிக்கிழமையன்று 2023-24ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) டெபாசிட்டுகள் மீதான வட்டியை 8.25 சதவிகிதமாக உயர்த்தியது. இது மூன்று ஆண்டுகளில் உயர்ந்தபட்ச வட்டிவிகிதம் ஆகுமன்.

மார்ச் 2023 இல், 2021-22 இல் 8.10 சதவீதமாக இருந்த பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 2022-23 இல் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. முன்னதாக மார்ச் 2022 இல், ​​2021-22க்கான வட்டியை 2020-21 இல் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைத்தது. இது நாற்பது ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச வட்டி ஆகும்.

"நான் தான் மிகப் பெரிய மீன்!" சேற்றில் சிக்கியபடி காமெடி செய்த நாகாலாந்து பாஜக அமைச்சர்!

அதற்கு முன் 1977-78ல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்தது தான் இது மிகக் குறைந்த அளவு ஆகும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான EPF டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021 இல் இபிஎஃப்ஓ குறித்து முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது.

மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) எடுத்த முடிவு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். நிதி அமைச்சக ஒப்புதல் பெற்ற பிறகு, 2023-24க்கான வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் ஆறு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.

2 பில்லியன் டாலர் அமேசான் பங்குகளை விற்ற ஜெஃப் பெசோஸ்! 2021க்குப் பின் முதல் முறை!