"நான் தான் மிகப் பெரிய மீன்!" சேற்றில் சிக்கியபடி காமெடி செய்த நாகாலாந்து பாஜக அமைச்சர்!
குளத்திலிருந்து வெளியே வந்த இம்னா களைத்துப் போயிருந்தார். "இது நிஜமாகவே நன்றாக இருந்தது" என்றும் அருகில் நின்ற ஒருவரிடம் கூறுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த ட்விட்டர் பயனர்கள் பலர் அவரது பதிவு குறித்து கருத்து கூறி வருகின்றனர்.
சேற்றில் சிக்கிக்கொண்டு தடுமாறிய வீடியோ மூலம் நாகாலாந்து பாஜக தலைவர் இம்னா அலோங் மீண்டும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இம்னா அலோங், இன்று சேறு நிறைந்த குளத்தில் சிரமப்பட்டு வெளியேறுவதைக் காட்டும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
நாகாலாந்து பாஜக தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் அந்த மாநிலத்தின் சுற்றுலாதுறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.
இம்னா அலோங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அவர் ஒரு குளத்தின் சேற்றில் கால்கள் சிக்கிக்கொண்ட நிலையில் வெளியேற தடுமாறிக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த நிலையிலும் அவரது நகைச்சுவை பேச்சுதான் நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.
S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை எக்கச்செக்கமாகக் குறைத்த சாம்சங்!
அதில் அவர், "என்சிஏபி (NCAP) ரேட்டிங் தான் எல்லாம். வண்டியை வாங்குவதற்கு முன் என்சிஏபி ரேட்டிங் எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளவும். ஏனென்றால் அதுதான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயம்" எனக் கூறியுள்ளார்.
இம்னா அலோங் அந்த வீடியோவில் தன்னை மீட்கும் பணியில் சுற்றி நிற்பவர்களிடம் பேசுவதும் வீடியோவில் உள்ளது. அதில் "இந்தக் குளத்தில் இருக்கும் பெரிய மீன் நான்தான்" என்று சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
வெளியேறத் திணறும் அவரை அங்கிருந்தவர்கள் போராடி மீட்டனர். குளத்திலிருந்து வெளியே வந்த இம்னா களைத்துப் போயிருந்தார். "இது நிஜமாகவே நன்றாக இருந்தது" என்றும் அருகில் நின்ற ஒருவரிடம் கூறுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த ட்விட்டர் பயனர்கள் பலர் அவரது பதிவு குறித்து கருத்து கூறி வருகின்றனர்.
2 பில்லியன் டாலர் அமேசான் பங்குகளை விற்ற ஜெஃப் பெசோஸ்! 2021க்குப் பின் முதல் முறை!