EMI ல் மாம்பழம் வாங்கலாம்! புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழத்தை ருசிக்க சூப்பர் சலுகை!
கொங்கன் பகுதியில் உள்ள தேவ்கட், ரத்னகிரி பகுதிகளில் கிடைக்கும் அல்போன்சா மாம்பழங்கள் ஒரு டஜன் ரூ.800 முதல் 1300 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
வீடு, கார் போன்ற விலை உயர்ந்த சாதனங்களை வாங்குவதற்குதான் எளிய தவணைத் திட்டம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது மாம்பழங்களை வாங்கவும் தவணைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்குத்தான் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
வாயில் எச்சில் ஊற வைக்கும் அல்போன்சா மாம்பழங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் கிடைக்கின்றன. அங்கு மாம்பழ விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் EMI திட்டத்தில் மாம்பழங்களை விற்பனை செய்துவருகிறார். "ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை தவணைத் திட்டங்களில் வாங்கலாம் என்றால், ஏன் மாம்பழங்களை வாங்கக்கூடாது" என்று சொல்கிறார் குருகிருபா டிரேடர்ஸ் உரிமையாளர் கௌரவ் சனாஸ்.
மதுரை மெட்ரோவில் 5 கி.மீ. சுரங்க ரயில் பாதை! விமான நிலையம் வரை பயணிக்கலாம்!
அந்த மாநிலத்தின் கொங்கன் பகுதியில் உள்ள தேவ்கட் மற்றும் ரத்னகிரி ஆகிடய இடங்களில் கிடைக்கும் அல்போன்சா (அல்லது 'ஹாபஸ்') மாம்பழங்கள் தலைசிறந்த மாம்பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. தற்போது இந்த மாம்பழங்கள் சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு டஜன் ரூ.800 முதல் 1300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
"சீசன் தொடக்கத்தில் விலை எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும். ஏசி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களை எல்லாம் இஎம்ஐயில் வாங்கலாம்; மாம்பழங்களை ஏன் வாங்கக்கூடாது என்று நினைத்தோம்" என்று கௌரவ் சனாஸ் கூறுகிறார். தவணை முறையில் மொபைல் போன்களை வாங்குவதைப் போன்றே பழங்களை வாங்கலாம். வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, மூன்று, ஆறு அல்லது 12 மாத தவணைகளாக EMI செலுத்தலாம்.
சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடம் வரை குறைகிறது! தெற்கு ரயில்வே அதிரடி!
ஆனால் இந்த தவணைத் திட்டம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு மாம்பழம் வாங்குவதற்கு மட்டும்தான் கிடைக்கிறது. இதுவரை நான்கு நுகர்வோர் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளனர் என்று சனாஸ் கூறினார்.
மாம்பழ பிரியர்களுக்கு இனிப்பான செய்தி... தபால் மூலம் வீட்டு வாசலுக்கு வரும் மாம்பழம்