மாம்பழ பிரியர்களுக்கு இனிப்பான செய்தி... தபால் மூலம் வீட்டு வாசலுக்கு வரும் மாம்பழம்
மாம்பழ பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. நல்ல தரம் மற்றும் மலிவு விலையில் மாம்பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக நுகர்வோரின் வீட்டு வாசலில் விநியோகிக்கும் முறையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாம்பழம் யாருக்குத்தான் பிடிக்காது? எல்லோரும் ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால், மார்க்கெட்டுக்கு சென்று தரமான மாம்பழங்கள் வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. தரமான, சுவையான மாம்பழங்களை, பல நேரங்களில் எல்லா இடங்களிலும் தேடியும் வாங்க முடியாது. ஆனால், இப்போது தலைசிறந்த மாம்பழங்கள் வீடுதேடியே வருகின்றன. இந்திய அஞ்சல் துறை மாம்பழங்களை டோர் டெலிவரி செய்கிறது. அதுவும் மா விவசாயிகளிடம் இருந்து நேரடியாகப் பெற்று நுகர்வோரின் வீட்டு வாசலுக்குக் கொண்டுபோய் வழங்குகிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எந்தப் பகுதியிலிருந்தும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் மாம்பழத்தை ஆர்டர் செய்தால், அது வெறும் 24 மணி நேரத்தில் சப்ளை செய்யப்படும். அதற்காக, கோலார் விவசாயிகள், தபால் துறையின் ஒத்துழைப்புடன் 'நம்ம தோட்டம்' என்ற தளத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நுகர்வோரின் வீட்டு வாசலில் பழங்களை கொண்டு சேர்க்கின்றனர். ஆர்டர் செய்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு பெட்டியாவது வாங்க வேண்டும். அந்த பெட்டியில் மூன்று கிலோ மாம்பழம் இருக்கும். அல்போன்ஸா, ரஸ்பூரி, கேசர், பாதாமி உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் கிடைக்கும். விவசாயிகள் சாகுபடி செய்த மாம்பழங்கள், இடைத்தரகர்கள் இன்றி, தபால் துறை மூலம் நேரடியாக நுகர்வோர் கைக்கு வந்தடையும்.
கீழடியில் 9வது கட்ட அகழ்வாய்வு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தோட்டங்களில் ரசாயனம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். முன்னதாக கோவிட் தொற்று காலத்தில் தபால் துறை மூலம் ஆன்லைனில் சுமார் 100 குவிண்டால் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த முறை அதைவிட அதிகமாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாம்பழ விற்பனை மற்றும் மேம்பாட்டு கழகத்தின் ஒத்துழைப்பும் இந்தத் திட்டத்துக்கு உதவுகிறது.
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகத் தொடரப்பட்ட 14 வழக்குகள் தள்ளுபடி!
ஆன்லைனில் ஆர்டர் செய்ய https://www.kolarmangoes.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 3 கிலோ மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டி ரூ.530 முதல் விற்பனைக்கு உள்ளன. மேலும் இதுதொடர்பான தகவலுக்கு 9886116046 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசிக்கும் கிஷன் சுமன் என்ற விவசாயியின் வயல்களில் விளையும் உலகப் பிரசித்தி பெற்ற மாம்பழமும் தபால் மூலம் கிடைக்கும். இந்த மாம்பழத்தின் பெயர் மியாசாகி மாம்பழம். உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழமாக இது கருதப்படுகிறது. கோட்டாவில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது கிராமத்தில் விவசாயம் செய்யும் இந்த விவசாயி, தனது விவசாயத்திற்காக மாநில அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். இரண்டே வருடங்களில் பலன் தரத் தொடங்கும் அருமையான மா ரகத்தை இந்த விவசாயி வளர்த்து வருகிறார்.
இந்த வகை மாம்பழம் சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் மியாசாகி நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த வகை மாம்பழத்துக்கு மியாசாகி மாம்பழம் என்று பெயர். ஆனால் இந்த மாம்பழம் ஒரு சிறப்பு பருவத்தில் மட்டுமே வளரும். இந்த மாம்பழம் வெப்பம் அதிகம் உள்ள காலத்தில் வளராது.
கிபூரி ஹீ... கெடுவோ ஹீ... இல்லாத ஆறுகளை உரிமை கோரும் சீனாவின் குறும்பு!