பான் கார்டு தொலைந்துவிட்டதா? உடனே புதிய பான் கார்டு வாங்குவது ரொம்ப ஈசி தான்!

பான் கார்டு தொலைந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆன்லைனில் எளிதாக பான் கார்டை நகலெடுக்கும் வசதி இருக்கிறது.

Duplicate Your Stolen, Lost PAN Card At Home In Just Rs 50; Check Easy Steps Here sgb

பான் (PAN)  கார்டு என்பது தனித்துவமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் தனிநபர் அடையாளத்தை சரிபார்க்க கேட்கப்படும் முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே பான் கார்டை பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.

வங்கி மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெறுவதற்கும் பான் கார்டு முக்கியமானது. பெரிய தொகையைச் செலவு செய்து பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டைக் காட்ட வேண்டியது அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் உள்ள பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

நிச்சயமாக அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அதனை நகலெடுக்கும் வசதி இருக்கிறது. பான் கார்டு திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ திரும்பவும் பான் கார்டு நகலைப் பெறுவது எளிதானது. அது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான அம்பேத்கர் சிலை; அமெரிக்காவில் அக். 14ஆம் தேதி திறக்க ஏற்பாடு

Duplicate Your Stolen, Lost PAN Card At Home In Just Rs 50; Check Easy Steps Here sgb

1. உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, வீட்டில் இருந்தபடியே பான் கார்டு நகலைப் பெறலாம் இதற்கு, சுமார் 50 ரூபாய் செலவழித்தால் போதும். முதலில் onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற NSDL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. இணையதளத்திற்குள் நுழைந்ததும் பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை உரிய இடங்களில் டைப் செய்ய வேண்டும். அதன் பிறகு திரையில் கேப்ட்சா குறியீட்டு இருக்கும். அதை நிரப்பி, Submit என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது திரையில் தோன்றும் மற்ற தகவல்களையும் நிரப்ப வேண்டும்.

3. இதற்குப் பிறகு, முகவரி மற்றும் பின் குறியீட்டை உறுதிப்படுத்த வேண்டும். அது சரிபார்க்கப்பட்டதும், உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP ஐ சரியாக டைப் செய்தால் அடுத்து, பணம் செலுத்தும் கட்டத்துக்கு நகரலாம்.

4. இப்போது பான் கார்டு அனுப்புவதற்கான கட்டணமாக 50 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதும் அதற்கான ரசீது கிடைக்கும். அதைப் பத்திரமாக சேமித்து வைத்திருக்க வேண்டும். பதிவுசெய்த முகவரிக்கு பான் கார்டு வந்து சேரும்.

கூகுள் பிக்சல் 8 மொபைல் இன்று ரிலீஸ்; ட்ரெண்டை மாற்றப்போகும் வெப்பநிலை சென்சார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios