ரூ.30,000 கோடிக்கு அதிபதியான பெங்களூரு பெண்.. உங்களுக்கு தெரியுமா? யார் இந்த கிரண் மஜும்தார்-ஷா?

பெங்களூருவின் மிகப் பெரிய பணக்காரப் பெண் பற்றி தெரியுமா? ரூ. 30,000 கோடி சொத்துக்கு சொந்தக்காரரை இந்த பதிவில் பார்க்கலாம்.

do you know Bengaluru richest woman Biocon founder Kiran Mazumdar-Shaw net worth

பயோகான் லிமிடெட் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பணக்கார பெண்மணி ஆவார். கிரண் மஜும்தார்-ஷா இந்தியாவின் வெற்றிகரமான தொழில் அதிபர்களில் ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லை. கிரண் மஜும்தார்-ஷா நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். எளிமையான பின்னணியில் இருந்து கோடீஸ்வரராக அவர் மேற்கொண்ட பயணம் பலருக்கும் ஊக்கமளிக்கிறது.

மார்ச் 23, 1953 இல் பெங்களூருவில் பிறந்த கிரண் மஜூம்தார், பிஷப் காட்டன் கேர்ள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், பின்னர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் விலங்கியல் பயின்றார். அவர் 1973 இல் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பை முடித்தார். சிறுவயதில், மருத்துவராக வேண்டும் என்பது கிரண் மஜும்தாரின் கனவாக இருந்தது. ஆனால் அவர் தனது கனவுகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

do you know Bengaluru richest woman Biocon founder Kiran Mazumdar-Shaw net worth

பின்னர் அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மால்டிங் மற்றும் ப்ரூயிங் படித்தார். பிறகு 1975 இல் மாஸ்டர் ப்ரூவர் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பிறகு, கிரண் மஜும்தார்-ஷா 1978 இல் பயோகானைத் தொடங்கினார். அவர் ஒரு சிறிய கேரேஜிலிருந்து வெறும் 10,000 ரூபாயில் பயோகானைத் தொடங்கினார்.

பப்பாளியில் இருந்து பெறப்பட்ட பப்பேன் என்ற நொதியைப் பிரித்தெடுப்பதன் மூலம் பயோகான் தனது வணிகத்தைத் தொடங்கியது. இறைச்சியை மென்மையாக்குவதற்கு பாப்பேன் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயோகான் பீர் தெளிவுபடுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஐசிங்க்ளாஸ் பிரித்தெடுக்கும் தொழிலிலும் இறங்குகிறது.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

do you know Bengaluru richest woman Biocon founder Kiran Mazumdar-Shaw net worth

கிரண் மஜும்தார்-ஷா ஒரு வருடத்திற்குள் வெற்றியை ருசித்தார். பயோகான் இந்த நொதிகளை அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்த முதல் நிறுவனமாக ஆனது. பயோகான் லிமிடெட் பயோகான் தற்போது இந்தியாவின் முன்னணி பயோடெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றாகும். கிரண் மஜும்தார்-ஷாவின் தற்போதைய நிகர மதிப்பு ரூ.21,000 கோடி.

மலேசியாவில் ஆசியாவின் மிகப்பெரிய இன்சுலின் தொழிற்சாலையை Biocon கொண்டுள்ளது. பிப்ரவரி 2022 இல், Biocon Biologics 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு Viatris இன் பயோசிமிலர்ஸ் வணிகத்தைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பயோகான் சந்தை மூலதனம் சுமார் ரூ.30,000 கோடி ஆகும்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios