Asianet News TamilAsianet News Tamil

அக்டோபர் மாதம் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்!

அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் முழுப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

Check full list of Bank Holidays in October month 2023 smp
Author
First Published Sep 26, 2023, 4:34 PM IST

பண்டிகை காலமான அக்டோபர் மாதம் நெருங்கி வருகிறது. தசரா உட்பட பல முக்கிய திருவிழாக்கள் அக்டோபர் மாதத்தில் வரவுள்ளன. இதன் விளைவாக, அக்டோபரில் பல நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால், வங்கி சார்ந்து எதாவது வேலைகளை திட்டமிட்டிருந்தால், நீங்கள் தடைகளை சந்திக்க நேரிடும். எனவே, வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது.

அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் முழுப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது, வார இறுதி நாட்களை உள்ளடக்கிய இந்த பட்டியல், ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும். அதன் விவரம் பின்வருமாறு;

மத்திய அரசு பணிக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் விண்னப்பிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்!

** 2 அக்டோபர் 2023 - மகாத்மா காந்தி ஜெயந்தி
** 12 அக்டோபர் 2023 - நரக சதுர்தசி (பல மாநிலங்களில் விடுமுறை)
** 14 அக்டோபர் 2023 - இரண்டாவது சனிக்கிழமை
** 15 அக்டோபர் 2023 - ஞாயிறு
** 18 அக்டோபர் 2023 - கடி பியு (அசாம் மாநிலத்தில்  விடுமுறை)
** 19 அக்டோபர் 2023 - சம்வத்சரி திருவிழா (குஜராத் மாநிலத்தில் விடுமுறை)
** 21 அக்டோபர் 2023 - துர்கா பூஜை (மகா சப்தமி)
** 22 அக்டோபர் 2023 - துர்கா பூஜை
** 23 அக்டோபர் 2023 - மகா நவமி
** 24 அக்டோபர் 2023 - விஜய தசமி
** 28 அக்டோபர் 2023 - சரஸ்வதி பூஜை
** 31 அக்டோபர் 2023 - சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்
ஆகிய நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios