பொதுமக்கள் கவனத்திற்கு.. சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு.. எத்தனை சதவீதம் தெரியுமா?
ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களே நடுத்தர மக்களின் மிக முக்கியமான முதலீடாக உள்ளது. குழந்தைகளீன் படிப்பு செலவு, திருமண செலவு, ஓய்வு காலத்திற்கு உதவும் திட்டம் என பல்வேறு எதிர்கால செலவினங்களுக்கு இந்த திட்டங்கள் பெரியளவில் உதவுகின்றன என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு திருத்தி வருகிறது.
இந்த நிலையில் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வரும் நிலையில், ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10-30 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்போது 4 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன? சிலிண்டர் விலை குறையுமா?
அதிகபட்சமாக ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகைக்கான (recurring deposit) வட்டி 0.3சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தொடர் டெபாசிட் வைத்திருப்பவர்கள் தற்போதுள்ள 6.2 சதவீதத்திற்கு எதிராக 6.5 சதவீத வட்டியைப் பெறுவார்கள். தபால் நிலையங்களில் ஓராண்டு கால வைப்புத்தொகையில் முதலீடு செய்பவர்கள் 6.9 சதவீதமும், இரண்டு வருட காலத்துக்கு 7 சதவீதமும் பெறுவார்கள்.
மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகளுக்கான டெர்ம் டெபாசிட்டுகளுக்கா ( term deposits) வட்டி விகிதங்கள் 7 சதவீதம் மற்றும் 7.5 சதவீதமாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது. பிரபலமான PPF மற்றும் சேமிப்பு வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவிகிதம் மற்றும் 4 சதவிகிதமாகவே நீடிக்கிறது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லைல். இதனால் அந்த திட்டத்தின் வட்டி விகிதம் 7.7 சதவீதமாக தொடர்கிறது.
பெண் குழந்தை சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதமும் மாற்றப்படவில்லை. இதனால் அந்த திட்டத்தின் வட்டி விகிதமும் தற்போதுள்ள 8 சதவீத அளவில் உள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகியவற்றின் வட்டி விகிதம் முறையே 8.2 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் ஆகும். இதே போல் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு திட்டத்தின் கால அவகாசம் அகஸ்ட் 15 வரை நீட்டிப்பு.. SBI வங்கி வெளியிட்ட குட்நியூஸ்
- interest rates
- senior citizen savings scheme
- small saving scheme
- small saving schemes
- small savings interest rates
- small savings scheme
- small savings scheme interest rate
- small savings scheme interest rate hike
- small savings scheme interest rates
- small savings schemes
- small savings schemes in india
- small savings schemes interest
- small savings schemes interest rate hike
- small savings schemes interest rates
- small savings schemes interest rates lowered