DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி(டிஏ) உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் அகவிலைப்படி(டிஏ) உயர்வு இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு 3 சவீதம் வரை இருக்கும். இதன் மூலம் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஒருகோடிக்கும் அதிகமானோர் பயன் பெறுவார்கள்.

2022, ஜனவரி 1 முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது. தற்போது 31 சதவீதம் அகவிலைப்படி பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் உயர்த்தப்படும்போது, 34 சதவீதமாக அதிகரிக்கும்.

7-வது ஊதியக்குழு வந்தபின், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்தவகையில் ஜனவரி மாதத்துக்கான படி மார்ச்சில் உயரும், அடுத்ததாக ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

மத்திய அரசுவட்டாரங்கள் தகவலின்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயரும்பட்சத்தில் அதிகபட்சமாக ரூ.90ஆயிரம்வரை ஊதியம் கூடுதலாகப் பெறுவார்கள். இதுகுறித்து ஜேசிஎம் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில் “ பணவீக்கத்தின் அடிப்படையில் டிஏ உயர்த்தப்பட வேண்டும். கடந்த18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் தொகையையும் வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்

உதாரணமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர் ரூ.30ஆயிரம்ஊதியம் பெற்றால், 3 சதவீதம்டிஏ உயர்த்தப்படும்போது, அவருக்கு மாதம் ரூ.900 உயரும். ஆண்டுக்கு ரூ.10,800 உயரும். கேபினெட் செயலாளர்கள் அந்தஸ்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மாதம் ரூ.7500 உயரும்,மாதம் ரூ.2.50 லட்சம் ஊதியம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.90ஆயிரம் கூடுதலாக கிடைக்கும்