Asianet News TamilAsianet News Tamil

BMW X3 2022 : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அறிமுகமான 2022 பி.எம்.டபிள்யூ. X3

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 2022 X3 ஃபேஸ்லிப்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

BMW X3 facelift launched in India
Author
Tamil Nadu, First Published Jan 20, 2022, 1:35 PM IST

பி.எம்.டபிள்யூ. ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 2022 X3 ஃபேஸ்லிப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. X3 ஃபேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 59.90 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 65.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய X3 ஃபேஸ்லிப்ட் மாடல் இரண்டு பெட்ரோல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. X3 மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிப்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள், எல்.இ.டி. ஹெட்லைட்கள்,பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பாரம்பரிய கிட்னி கிரில், முற்றிலும் புது தோற்றம் கொண்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

BMW X3 facelift launched in India

உள்புறம் ஃபிரீ ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்,12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட், ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டடவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

புதிய பி.எம்.டபிள்யூ. X3 ஃபேஸ்லிப்ப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 252 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

பெட்ரோல் வேரியண்டை தொடர்ந்து X3 ஃபேஸ்லிப்ட் மாடல் டீசல் என்ஜினுடனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்யூ. X3 ஃபேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.சி., ஆடி கியூ5, வால்வோ எக்ஸ்.சி.60, லெக்சஸ் NX மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios