Asianet News TamilAsianet News Tamil

Bharti Airtel: JPMorgan :கொளுத்திப்போட்ட ஜேபி மோர்கன்! பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பு 4 % வீழ்ச்சி!

சர்வதேச பங்குதரகு நிறுவனமான ஜேபி மோர்கன்(JP Morgan ) பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பின் தரத்தைக் குறைத்ததையடுத்து, இன்றைய பங்குச்சந்தையில் ஏர்டெல் பங்கு வர்த்தகத்தின் இடையே 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஒரு பங்கு விலை ரூ.706.60ஆகக் குறைந்தது.

Bharti Airtel's shares is down more than 4%. This is why:
Author
First Published Jan 11, 2023, 2:43 PM IST

சர்வதேச பங்குதரகு நிறுவனமான ஜேபி மோர்கன்(JP Morgan ) பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பின் தரத்தைக் குறைத்ததையடுத்து, இன்றைய பங்குச்சந்தையில் ஏர்டெல் பங்கு வர்த்தகத்தின் இடையே 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஒரு பங்கு விலை ரூ.706.60ஆகக் குறைந்தது.

கடந்த இரு வர்த்தக தினங்களில் பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பு மட்டும் 6.6% குறைந்துள்ளது. பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பை ரூ.860 ஆக நிர்ணயித்திருந்த ஜேபி மோர்கன் நிறுவனம் ரூ.710 ஆகக் குறைத்தது. இதையடுத்து, இன்றைய பங்கு வர்த்தகத்தில் ஏர்டெல் பங்கு மதிப்பு 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

2023ல் உலக பொருளாதார மந்தநிலை வரக்கூடும்: உலக வங்கி எச்சரிக்கை

Bharti Airtel's shares is down more than 4%. This is why:

ஜேபி மோர்கன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ பார்தி ஏர்டெல் பங்கு மதிப்பை 3 முக்கிய காரணிகளை அடிப்படையாகக் வைத்து குறைத்துள்ளோம். முதலாவது, வரும் நிதியாண்டில் 5ஜி சேவையில் பார்தி ஏர்டெல், ஜியோ நிறுவனங்களிடம் இருந்து எந்த விலை உயர்வையும் எதிர்பார்க்க முடியாது.

 2வதாக சந்தையில் ஜியோ நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்க பார்தி ஏர்டெல் நிறுவனம், முதலீட்டை உயர்த்தும். 3வதாக, கட்டண உயர்வு இல்லாமல், முதலீடு மட்டும அதிகரிப்பு என்பது, ஏர்டெல் செயல்பாட்டைக் குறைக்கும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5ஜி சேவைக்கு முதலீட்டை பெரிதாக ஈர்க்க முடியாது.

மாதம் ரூ.4,950 வருமானத்தை உறுதிசெய்யும் அஞ்சல சேமிப்புத் திட்டம்:முழு விவரம்

ஆதலால், ஏஆர்பியு என்ற தரவரிசையில் இருந்து ஏர்டெல் நிறுவனத்தைக் குறைக்கிறோம். ஏர்டெல் பங்கு மதிப்பை ரூ.860லிரிருந்து ரூ.710 ஆகநிர்ணயிக்கிறோம்.

Bharti Airtel's shares is down more than 4%. This is why:

5ஜி சேவை அறிமுகத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கு இடையே கடும் போர், விலைப்போட்டி இருக்கும். இதில் ஜியோ நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு தரவரிசையில் முன்னேறும் என நம்புகிறோம். 

ஏர்டெல், நிறுவனம் முதலீட்டை ஈர்த்து சந்தையை தக்கவைக்க முயலும். இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்பதால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெரிதாக இந்த நிறுவங்களில் 5ஜி முதலீடு இருக்காது. 2023ம் ஆண்டில் 5ஜி கட்டணத்தை உயர்த்துவதன் அடிப்படையில் நிறுவனங்களின் செயல்பாடு முடிவாகும்.

ஆனால், ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 4ஜி வழங்கும் அதே கட்டணத்தில்தான் 5ஜி சேவையையும் வழங்குவார்கள் என நம்புகிறோம். பார்தி ஏர்டெல் நிறுவனம் 10 சதவீதம் கட்டண உயர்வை அறிவிக்கும் என நம்புகிறோம், இல்லாவிட்டால் அடுத்த 3மாதங்களில் பெரிய சரிவை எதிர்கொள்ளும்

இவ்வாறு ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios