Asianet News TamilAsianet News Tamil

World Bank Recession: 2023ல் உலக பொருளாதார மந்தநிலை வரக்கூடும்: உலக வங்கி எச்சரிக்கை

2023ம் ஆண்டில் உலகில் பெரும்பாலான நாடுகளில், பிராந்தியங்களில் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

World Bank revises down its 2023 economic growth projections and issues a worldwide recession alert.
Author
First Published Jan 11, 2023, 11:26 AM IST

2023ம் ஆண்டில் உலகில் பெரும்பாலான நாடுகளில், பிராந்தியங்களில் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2023ம் ஆண்டு 1.7சதவீதம் அதிகரித்தாலும், அது ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே நீடிக்கும். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பொருளாதார சுணக்கம் இருக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது

World Bank revises down its 2023 economic growth projections and issues a worldwide recession alert.

7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா அடுத்த 7 ஆண்டுகளில் மாறும்: ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை

உலக வங்கியின் தலைவர் டேவிஸ் மால்பாஸ் “ உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை” நேற்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

உலகளவில் பல்வேறு நாடுகளில் நிலவும் பணவீக்கம், வங்கிகளில் அதிகமான வட்டிவீதம், உக்ரைன் மீது ரஷ்யாவின் போர், போன்றவை முதலீட்டைக் குறைத்து பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்லும். 
இந்த ஆண்டு உலக பொருளதாரத்தில் உற்பத்தி 1.7% அதிகமாக இருந்தாலும், அது ஆண்டின் முதல்பாதியில் மட்டுமே இருக்கும், 2ம்பாதியில் போதுமான அளவு இருக்காது, உலக நாடுகளில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். 

வளர்ந்து வரும் நாடுகள், வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு இறுதியில் 6 சதவீதத்துக்குள்ளாகவே இருக்கும். அமெரி்க்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வரும் மந்தநிலை ஏழை நாடுகளிலும் எதிரொலிக்கும். 

World Bank revises down its 2023 economic growth projections and issues a worldwide recession alert.

மத்திய பட்ஜெட்டில் 35 வகையான பொருட்கள் விலை உயர வாய்ப்பு?

பணவீக்கம் ஓரளவுக்கு இருந்தாலும் அதைக் குறைக்கும் வகையில் மத்திய வங்கிகள் செயல்பாடும், வட்டிவீத உயர்வும் எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருக்கும்.பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவு, நிதிக்கட்டுப்பாடுகள், அதிகக்கடன் ஆகியவை புதிய முதலீடு வருகையை கடுமையாகத் தடுக்கும். 
கடன் பிரச்சினைகள், உலக பொருளாதார மந்தநிலையைத் தடுக்க உலக நாடுகள் சேர்ந்து விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். வளர்ந்துவரும் நாடுகளில் முதலீடு பெருமளவு அதிகரி்த்து வருகிறது.

குறிப்பாக சர்வதேச சமூகத்திடம் இருந்து முதலீடு அதிகரித்துள்ளது. விவசாயம் மற்றும் எரிபொருள் மானியங்கள்தான் பெரிய சிக்கலாக இருக்கிறது. உலகம் இப்போது மிகவும் இறுக்கமான பொருளாதாரத்தில் இருந்தாலும், தோல்விக்கு இடமளிக்கக்கூடாது.

இந்தியாவில் 1,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க அமேசான் முடிவு?

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும், வளர்ச்சிக் கண்ணோட்டத்தை மேம்படுத்தவும், வலுவான தனியார் துறைகள் மற்றும் மக்களுக்கு சிறந்த வாய்ப்புகளுடன் வலுவான பொருளாதாரத்தை உருவாக்கவும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைத் தொடங்கலாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios