bank holiday august :18 நாட்கள் வங்கிகள் விடுமுறை: ஆகஸ்ட் மாத பட்டியல் இதோ!
ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 18 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வங்கிகளுக்கான விடுமுறைக் காலண்டரில் ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த 18 நாட்கள் விடுமுறையும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
58ஆயிரத்துக்கும் அதிகமான பொதுத்துறை காப்பீடு ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்
ஆகஸ்ட் மாதத்தில் ருக்பா ஷி ஜி, தேசப்பற்று தினம், முகரம், ரக்ஸாபந்தன், சுதந்திர தினம், பார்சி புத்தாண்டு, ஜென்மாஸ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீமந்தா சங்கர்தேவ் திதி, விநாயகர் சதுர்த்திபோன்ற பண்டிகைகள் வருகின்றன.
வங்கிகளுக்கான இந்த 18 நாட்கள் விடுமுறை அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது அல்ல. மாநில அரசின் முடிவுகளுக்கு ஏற்பவும், கொண்டாட்டங்களுக்கு ஏற்பவும் விடுமுறை மாறுபடும். அதேசமயம், பொதுத்துறை, தனியார் வங்கிகள் இந்த 18 நாட்கள் விடுமுறையில் இருந்தாலும், ஆன்-லைன் வங்கிச் சேவை தொடர்ந்து செயல்படும்.
இந்த 18 நாட்கள் விடுமுறையில், 6 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன, 3 சனிக்கிழமைகள் வருகின்றன. இந்த வகையில் 9 நாட்கள் விடுமுறை வங்கிகளுக்கு கிடைத்து விடுகின்றன. மற்ற பண்டிகை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்
sbi: எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களே! உங்களுக்காக வாட்ஸ்அப் பேங்கிங் சேவை தொடக்கம்: வசதிகள் என்ன?
ஆகஸ்ட் மாத விடுமுறை நாட்கள்:
ஆகஸ்ட் 1: ருப்கா ஷி ஜி நாளையொட்டி காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 7: முதல் ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8: ஜம்மு ஸ்ரீநகரில் முகரம் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 9: முகரம் பண்டிகையையொட்டி, அகர்தலா, அகமதாபாத்,ஏய்ஸ்வால், பெலாபூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹெதராபாத், ஜெய்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர்,டெல்லி , பாட்னா, ராய்பூர், ராஞ்சி ஆகிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 11: ரக்ஸாபந்தன் பண்டிகையொட்டி வங்கிகள், அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்பூர், ஷிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 12: கான்பூர், லக்னோவில் ரக்ஸாபந்தன் நாளையொட்டி விடுமுறை
ஆகஸ்ட் 13: தேசப்பற்று தினம் மணிப்பூரில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இம்பால் நகரில் வங்கிகளுக்கு விடுறை(2வது சனிக்கிழமை)
itr filing date: வருமான வரி ரிட்டன் தாக்கலுக்கு காலக் கெடு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு பதில்
ஆகஸ்ட் 14: 2-வது ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15: சுதந்திரதினம் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 16: பார்சி இனத்தவர்களுக்கான புத்தாண்டு என்பதால், பெலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 18: ஜென்மாஸ்டமி என்பதால், புவனேஷ்வர், டேராடூன்,
ஆகஸ்ட் 19: கிருஷ்ண ஜெயந்தி என்பதால், அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்பூர், ஜம்மு, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 20: ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்திக்காக வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 21: 3-வது ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 27: 4-வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 28: 4-வது ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 29: ஸ்ரீமாந்த சங்கர்தேவா திதி என்பதால் கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 31: விநாயகர் சதுர்த்தி, வங்கிகளுக்கு விடுமுறை