Asianet News TamilAsianet News Tamil

58ஆயிரத்துக்கும் அதிகமான பொதுத்துறை காப்பீடு ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்

நாட்டின் மிக முக்கியமான 4 பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைச் சேர்ந்த 58ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வரும் 27ம்தேதி முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்

General Insurance Employees  To Go On 2-Day Strike From July 27
Author
New Delhi, First Published Jul 22, 2022, 2:49 PM IST

நாட்டின் மிக முக்கியமான 4 பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைச் சேர்ந்த 58ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வரும் 27ம்தேதி முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்

காப்பீடு நிறுவனத்துக்கு மத்திய அரசு போதுமான ஆதரவு வழங்கவில்லை, ஊதிய உயர்வுஇல்லை, அக்கறையில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களே! உங்களுக்காக வாட்ஸ்அப் பேங்கிங் சேவை தொடக்கம்: வசதிகள் என்ன?

இந்த வேலை நிறுத்தத்தில் நியூ இந்தியா அசுரன்ஸ், தி ஓரியன்டல் இன்சூரன்ஸ், தி நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா அசூரன்ஸ் ஆகிய காப்பீடு நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

காப்படு ஊழியர்கள் கூட்டமைப்பின் செயல்தலைவர் லலித் சுவர்னா கூறுகையில்  “ 2012ம் ஆண்டு கடைசியாக ஊதிய திருத்தம் செய்யப்பட்டது, அதன்பின் இதுவரை ஊதிய மறுசீரமைப்பு ஏதும் செய்யவில்லை. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
 அந்த வகையில் 2017ம் ஆண்டு, 2022ம் ஆண்டில் மறுசீரமைப்பு செய்யவில்லை.

இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்

ஆதலால், இதை மத்திய அரசுக்கு அறிவி்க்கும் வகையில் வரும் 27, 28ம்தேதி இரு நாட்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு

ஜிஐஇயு தலைவர் உதயன் பானர்ஜி கூறுகையில் “ எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கெனவே கடந்த 15ம் தேதி வேலை நிறுத்தம் செய்தோம். ஊதிய மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு வாய்திறக்க மறுக்கிறது. பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை மத்திய அரசு கைவிட்டதாகவே நினைக்க வேண்டியதிருக்கிறது. அரசு காப்பீடு நிறுவனங்களை மத்திய அரசு தனியார்மயமாக்கும் நோக்கில் செயல்படுவதாகவே தெரிகிறது” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios