ford chennai plant: ford last car: கண்ணீருடன் விடைபெற்ற கடைசி ஃபோர்டு(Ford) கார்: சென்னை தொழிற்சாலை மூடல்
சென்னையில் செயல்பட்டு வந்த அமெரிக்க மோட்டார் வாகனத் தயாரிப்பான ஃபோர்டு(FORD) நிறுவனம் தனது கடைசி காரை தயாரித்து உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. வரும் 31ம்தேதியோடு தொழிற்சாலை மூடப்படுகிறது.
தயாரிப்பான ஃபோர்டு(FORD) நிறுவனம் தனது கடைசி காரை தயாரித்து உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. வரும் 31ம்தேதியோடு தொழிற்சாலை மூடப்படுகிறது.
சென்னையில் கடந்த 1995ம் ஆண்டு முதல் ஃபோர்டு கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை மறைமலை நகரில் 350ஏக்கர் பரப்பில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் 2,600 தொழிலாளர்கள் பணியாற்றினர்.
இந்தத் தொழிற்சாலையில் குறிப்பாக எக்கோ ஸ்போர்ட், எண்டோவர் வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. சென்னையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதியானது.
இந்நிலையில், தொடர் இழப்பு, மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளால் அதிகமான செலவு வரும்காலத்தில் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி இந்தியாவில் இருந்து வெளியேற இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து சென்னை மறைமலைநகரில் செயல்படும் தொழிற்சாலையை நிறுத்தப்போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்தது.
epfo: epf: பிஎப் அமைப்பில் மே மாதத்தில் மட்டும் புதிதாக 16.8 லட்சம்பேர் இணைவு: 83 % வளர்ச்சி
இந்நிலையில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் மத்திய அரசு ஃபோர்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்திருந்தது. அந்தத் திட்டத்தில் ஏராளமான பலன்கள் கிடைக்கும். இதற்கு ஃபோர்டு நிறுவனமும் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால், திடீரென்று அந்த விண்ணப்பத்தையும் திரும்பப் பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல் சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு பேட்டரி கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் இருப்பதாக முதலில் ஃபோர்டு நிறுவனம் பின்னர் திட்டம் ஏதும் இல்லை தெரிவித்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் கடைசியாக ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் மாடலின் கடைசிக் கார் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இனிமேல் தொழிற்சாலையில் கார் தயாரிப்பு இல்லை என்பதால், ஊழியர்கள் அனைவரும் கண்ணீர் மல்க கடைசிக் காரை வழியனுப்பினர்.
ஃபோர்டு நிறுவனத்தின் முதல் காரை எந்த அளவு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்களோ அதே அளவு வேதனை, வருத்தத்துடன் காரை அனுப்பி வைத்தனர். காருக்கு பலூன்கள், வண்ணக் காகிதங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டி காரை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
ஏற்கெனவே குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. அடுத்ததாக சென்னையில்உள்ள ஃபோர்டு தொழிற்சாலை வரும் 31ம் தேதியுடன் மூடப்பட்டு அடுத்தது எந்த நிறுவனத்தாவது விற்கப்படலாம்
ஃபோர்டு நிறுவனத்தின் சென்னைத் தொழிற்சாலை மூடப்படுவதால், அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.