Asianet News TamilAsianet News Tamil

நிஃப்டியில் டாப் கியரில் எகிறிய மோட்டார் வாகனங்களின் பங்கு மதிப்பு: காரணம் என்ன?

கடந்த 52 வாரங்களுக்குப் பின்னர் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு டாப் கியரில் செல்வது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

Auto stocks like TVS, Tata motors, M&M are high at 52 weeks
Author
First Published Jun 7, 2023, 12:18 PM IST

மோட்டார் வாகன நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், பஜாஜ் மோட்டார்ஸ், மகேந்திரா அண்டு மகேந்திரா, டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு கடந்த 52 வாரங்களுக்குப் பின்னர் ஏறுமுகத்தில் இருக்கிறது. நடப்பாண்டில் மோட்டார் வாகன நிறுவனங்களின் பங்கு மதிப்பு நிப்டி ஆட்டோ இன்டெக்சில் 17 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மே ஒன்பதாம் தேதிக்குப் பின்னர் மூன்று முறை நிஃப்டியில் இன்டெக்ஸ் இறங்கி காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நிஃப்டி 50 இன்டெக்ஸ்சில் டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன. மகேந்திரா அண்டு மகேந்திரா மற்றும் மாருதி சுசூகி ஆகிய பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு லாபம் அளித்துள்ளது. டாடா மோட்டாஸ் பங்கு மதிப்பு 42%, பஜாஜ் பங்கு மதிப்பு 30%, மாருதி பங்கு மதிப்பு 16%, மகேந்திரா அண்டு மகேந்திரா பங்கு மதிப்பு 13% இன்று நிஃப்டியில் அதிகரித்து காணப்பட்டது.

அதேசமயம் ராயல் என் பீல்டு தயாரிப்பு நிறுவனமான ஈச்சர் மோட்டர்ஸ், ஹீரோ மோடோகார்ப், எம் அண்டு எம், மாருதி ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக குறைந்து காணப்படுகிறது. 

Today Gold Rate in Chennai : போற போக்கா பார்த்தா! தங்கமே வாங்க முடியாது போல! ஜெட் வேகத்தில் உயரும் விலை..!

கடந்த மே மாதத்தில் மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருந்த காரணத்தால் இந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பும் உயர்ந்து காணப்படுகிறது. ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் கழகம் அளித்திருக்கும் தகவலில் கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மே மாதத்தில் சில்லறை விற்பனையில் மோட்டார் வாகனங்களின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 

பயணிகளுக்கான வாகனங்கள் எளிதாக கிடைக்கப் பெற்றது,  நிலுவையில் உள்ள ஆர்டர்களை உடனுக்குடன் அளித்தது, புதிய அறிமுக வாகனங்களுக்கான தேவை ஆகியவை பங்குகளின் மதிப்பு உயர்வுக்கு உதவி உள்ளது. நடப்பு ஜூன் மாதத்தில் புதிய வாகனங்கள் அறிமுகம் மூலம் மேலும் மோட்டார் வாகன பங்குகளின் மதிப்பு உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இணையப் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலரை எட்டும்! அறிக்கையில் தகவல்

இம்மாதத்தில் புதிய வரவாக மாருதி சுஸுகியின் ஜிம்னி, ஹோண்டாவின் எலிவேட், வோக்ஸ்வாகனின்  விர்டஸ் மற்றும் டைகன் மற்றும் மெர்சிடீஸின் SL55 ரோட்ஸ்டர் ஆகியவை வரிசை கட்டி நிற்கின்றன. 

டாடா மோட்டார்ஸின் ஜாகுவார் லேண்ட் ரோவரின் சில்லறை விற்பனை கடந்த ஏப்ரல் 2023-ல் கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. டாடா மோட்டார்ஸின் அடுத்த முக்கிய முதலீடு எலக்ட்ரிக் வாகன பேட்டரி ஆலை ஒப்பந்தமாகும். குஜராத்தில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இங்கு இதற்காக 1.6 பில்லியன் டாலர் அளவிற்கு டாடா முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios