akasa air: ஆகாசத்தில் பறக்கப்போகிறது ஆகாஸா: ஜூலையில் வர்த்தக சேவை தொடக்கம்
akasa air கோடீஸ்வரர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாஸா விமானம் ஜூலை மாதக் கடைசியில் தனது வர்த்தகச்சேவையைத் தொடங்கும் என்று அநத நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி துபே தெரிவித்தார்
.
கோடீஸ்வரர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாஸா விமானம் ஜூலை மாதக் கடைசியில் தனது வர்த்தகச்சேவையைத் தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே தெரிவித்தார்.
ஆகாஸா நிறுவனம் தனது முதல் பரிசோதனை விமானத்தை அடுத்த வாரம் இயக்கிப் பார்த்து, இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநகரத்திடம் சான்று பெற்றபின் முறைப்படி வர்த்தகச் சேவையைத் தொடங்கும்.
அமெரிக்காவின் போர்ட்லாந்தின் போயிங் நிறுவனத்திடம் எரிபொருளை சேமிக்கக் கூடிய பிரத்யேக போயிங் விமானத்தை தயாரிக்கக் கோரி ஆகாஸா விமான நிறுவனம் ஆர்டர் அளித்திருந்தது. அதில் முதல் விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையம் வந்து சேர்ந்தது. 2023ம் ஆண்டுக்குள் 18 போயிங் விமானங்களை ஆகாஸா நிறுவனம் வாங்க உள்ளது.
72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் அனைத்தும், எரிபொருளை மிச்சப்படுத்தி பறக்கும் சிஎப்எம் லீப் பி ரக எஞ்சனால் வடிவமைக்கப்பட்டவை.
வருகிறது இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங்: Bharat-NCAP வரைவுக்கு நிதின் கட்கரி ஒப்புதல்
இந்நிலையில் ஆகாஸா விமானநிறுவனத்தின் தலைமைநிர்வாக அதிகாரி வினய் துபே கூறுகையில் “ அடுத்த வாரத்தில் ஆகாஸா விமானத்தின் சோதனை ஓட்டம் நடக்கும். இந்த சோதனை ஓட்டத்துக்குப்பின் சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகம் சான்று அளித்தபின், வர்த்தகச் சேவை தொடங்கும். பெரும் வர்த்தகச் சேவை ஜூலை மாதத்தின் கடைசியில் தொடங்க வாய்ப்புள்ளது.
அடுத்த இரு வாரங்களில் ஆகாஸா விமான டிக்கெட் விற்பனை தொடங்கப்படும். எங்களின் நோக்கம் உள்நாட்டு நகரங்களை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாயின்ட் டூ பாயின்ட் சேவையை அடிப்படையாக வைத்துள்ளோம்.
எங்களுக்கு வழக்கமான நகரங்களுக்கு விமானச் சேவையை அளிப்பதைவிட, 2-ம்நிலை நகரங்கள், 3-ம்நிலை நகரங்களை மையமாக வைத்து சேவையைத் தொடங்க இருக்கிறோம்.
TATAmotors Nexon பேட்டரி கார் தீப்பிடித்தது எப்படி? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
விமானப் போக்குவரத்தில் இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது, விமானக் கட்டணத்தில் நல்ல போட்டியும் இருக்கிறது. நிச்சயமாக பிற நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதத்தில் கட்டணம்இருக்கும். உச்சபட்சமான வாடிக்கையாளர் சேவை, ஊழியர்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விமான நிறுவனம் செயல்படும்.
இந்தியாவில் விமானங்கள் அதிகமாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. அடுத்த 20 ஆண்டுகளில் ஆயிரம் விமானங்கள் இந்தியாவுக்கு தேவை என்று ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 120 ஜெட் விமானங்கள் இந்தியாவுக்குத் தேவை, அந்த அளவு தேவை அதிகரி்த்து வருகிறது என்று, மத்திய அமைச்சர் ஜோதிர்ஆதித்யநா சிந்தியாகூட தெரிவித்துள்ளார்.
ஆகாஸா நிறுவனம் டெல்லியில் விமானிகளுக்கான பயி்ற்சி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. 100 விமானிகளுக்கு பயிற்சி அளித்து தயார்நிலையில் வைத்திருக்கிறோம்
இவ்வாறு வினய் துபே தெரிவித்தார்