Asianet News TamilAsianet News Tamil

nitin gadkari: வருகிறது இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங்: Bharat-NCAP வரைவுக்கு நிதின் கட்கரி ஒப்புதல்

Nitin Gadkari approved draft car safety rating system :இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங் அதாவது பாதுகாப்பு ரேட்டிங்கை மத்தியஅரசு கொண்டுவர இருக்கிறது. பாரத் என்சிஏபி(Bharat-NCAP) என்ற பெயரில் கொண்டுவரப்படும் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஒப்புதல் அளித்துள்ளார்.

Nitin Gadkari approved draft of Bharat-NCAP car safety rating system
Author
New Delhi, First Published Jun 25, 2022, 10:03 AM IST

இந்தியாவுக்கான கார் பாதுகாப்பு ரேட்டிங் அதாவது பாதுகாப்பு ரேட்டிங்கை மத்தியஅரசு கொண்டுவர இருக்கிறது. பாரத் என்சிஏபி(Bharat-NCAP) என்ற பெயரில் கொண்டுவரப்படும் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஒப்புதல் அளித்துள்ளார்.

வாழ்ந்தா இங்க வாழணும்! உலகிலேயே வாழத் தகுதியான முதல் 10 நகரங்கள் பட்டியல்?

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் செயல்பாடு, பாதுகாப்பு அம்சங்கள், விபத்துகள் ஏற்படும்போது பயணிகளுக்கான பாதுகாப்பு ஆகியவை குறித்து இந்த வரைவு மசோதா கொண்டிருக்கும். இந்த வரைவு மசோதாவுக்கான விதிகள் இன்னும் வகுக்கப்படவில்லை. 

Nitin Gadkari approved draft of Bharat-NCAP car safety rating system

மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத்-என்சிஏபி(BHARAT-NCAP) ரேட்டிங் முறை நுகர்வோர் தளமாக அமையும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான கார்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்கும். அதேசமயம், பாதுகாப்பான வாகனங்களைத் தயாரிக்க இந்திய தயாரிப்பாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். 

இலவச ரேஷன் திட்டம் செப்டம்பருக்கு பிறகு இல்லையா? செலவீனத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை


கார்களுக்கு விபத்துக் பரிசோதனை ரேட்டிங் பயணிகளின் பாதுகாப்புக்கு மட்டும் முக்கியமல்ல, அந்த ரேட்டிங் இருந்தால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கார்களின் தரமும்கூடும்.

சர்வதேச அளவில் இருக்கும் விபத்துப் பரிசோதனை ஆய்வுகளுக்குஇணையாக இந்தியாவிலும் பாரத் என்சிஏபி விதிமுறைகள் உருவாக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தங்களின் கார்களை இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்தி ரேட்டிங் பெறலாம்”  எனத் தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari approved draft of Bharat-NCAP car safety rating system

இந்தியச் சாலைகளில்ஓடும் கார்கள் பெரும்பாலும் சர்வதேச என்சிஏபி பாதுகாப்பு ரேட்டிங் முறைப்படிதான் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவுக்கென தனியாக பாதுகாப்பு ரேட்டிங் முறை ஏதும் இல்லை. இந்தியச் சாலைகளுக்கு ஏற்றார்போல், பாதுகாப்பு ரேட்டிங் முறை விரைவில் வரும் என்றாலும், இது அனைத்துக் கார்களுக்கும் கட்டாயமாக்கப்படுமா என்பது, ரேட்டிங் வழங்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios