Moodys: இப்படியா ஷாக் கொடுப்பது!அதானி குழுமம் நிதிநிலை குறித்து மூடிஸ் நிறுவனம் ஆய்வு
Moodys india: கெளதம் அதானிக்கு பங்குச்சரிவு தொடர் அதிர்ச்சியை அளித்துவரும் நிலையில், சர்வதேச கடன்தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் அதானி குழுமத்தின் தரத்தை ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
Moodys india: கெளதம் அதானிக்கு பங்குச்சரிவு தொடர் அதிர்ச்சியை அளித்துவரும் நிலையில், சர்வதேச கடன்தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் அதானி குழுமத்தின் தரத்தை ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு போன்றவற்றை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த வாரம் வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின், அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு பங்குச்சந்தையில் மளமளவெனச் சரிந்து வருகிறது.
அதானி நிலைமை இப்படியா ஆகணும்! பாதி சொத்தைக் காணோம்! டாப்-20யிலிருந்து துடைத்து எறியப்பட்டார்
அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் ரூ.20ஆயிரம் கோடிக்கு எப்பிஓ வெளியிட்டிருந்து. பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், அந்த எப்பிஓ-வை அதானி குழுமம்திடீரென ரத்து செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவும் முடிவு செய்தது.
இதனால் அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு 25 சதவீதத்துக்கும் மேலாகச் சரிந்தது, 7 நாட்களில் 66 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி க்ரீன்எனர்ஜி,அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பங்குகள் மதிப்பு ஏறக்குறைய 75 சதவீதம் வரை சரிந்து கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
ஏற்கெனவே ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு வங்கியான கிரெடிட் சுசி, அதானி குழுமத்தின் பங்குப் பத்திரங்களை அடமான வைப்பதறை ஏற்க மறுத்துவிட்டது. இந்தியப் பங்குச்சந்தையும் அதானி குழுமத்தின் 3 பங்குகளின் நிலையை தீவிரக் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளன.
நிப்டி பிடியில் அதானி எண்டர்பிரைசஸ் ; ஃபியூச்சர் அண்டு ஆப்ஷனில் அதானியின் 2 நிறுவனங்களுக்கு தடை!!
கடந்த 7 வர்த்தகதினத்தி் மட்டும் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்2வது இடத்தில் இருந்த அதானி, இப்போது 22வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த செக் வைக்கும் வகையில், சர்வதேச கடன்தரக் கட்டுப்பாட்டு நிறுவனமான மூடிஸ் அதானி குழுமத்தை தரமதிப்பீடு செய்ய இருக்கிறது.
இது குறித்து மூடிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்குப்பின், பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து, வேகமாகச் சரி்ந்து வருகிறது எங்களுக்கு கவலையை அளி்க்கிறது.
எங்களின் முதல் நோக்கம் என்பது இதுபோன்ற நேரத்தில் நிருவனத்தின் சொத்துக்கள் மற்றும் தரத்தை மதிப்பிடுவதுதான். அதானி நிறுவனத்தின் நிதி நெகிழ்வுத்தன்மை, ரொக்கக் கையிருப்பு நிலை, வளர்ச்சிக்கான போதுமான கையிருப்பு நிதி, சவால்களை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிட வேண்டும்.
எல்ஐசி- நிறுவனத்துக்கு கடந்த 5 நாட்களில் ரூ.65,400 கோடி இழப்பு: பங்கு மதிப்பு மளமளவென சரிவு
அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 3 நிறுவனங்களை கண்காணிப்பில் வைக்கிறோம். இந்த நிறுவனங்களின் நீண்டகால வர்த்தக ஒப்பந்தம், சந்தை நிலவரம், ரொக்க பணம் வரத்து ஆகியவற்றை கண்காணிப்பில் வைக்கிறோம்.
அதானி குழுமத்தின் பங்குமதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது, சொத்து மதிப்பு குறைந்துவருவது, அந்த நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகள் வரை மூலதனத்துக்காக, முதலீட்டுக் கடன்பெறும் தகுதியைக் குறைத்துவிடும், நிதிதிரட்டலில் சிக்கல் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளது.