LIC Share:எல்ஐசி- நிறுவனத்துக்கு கடந்த 5 நாட்களில் ரூ.65,400 கோடி இழப்பு: பங்கு மதிப்பு மளமளவென சரிவு
LIC Share price:இந்தியப் பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், கடந்த 5 நாட்கள் மட்டும் ரூ.65 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

LIC Share price: இந்தியப் பங்குச்சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதால், கடந்த 5 நாட்கள் மட்டும் ரூ.65 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஜனவரி 24ம் தேதி ரூ. 4 லட்சத்து 44ஆயிரத்து 141 கோடியாக இருந்தது. இது நேற்றுமுன்தினம் ரூ,3,78,740 கோடியாகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய 5 நாட்கள் வர்த்தகத்தில் எல்ஐசி பங்கு மதிப்பு 14.73 சதவீதம் சரிந்துள்ளது.
ஜனவரி 24ம் தேதி எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ.702.10 பைசாவாக இருந்தது, இது நேற்றை வர்த்தகம் முடிவில் ரூ.599.10 பைசாவாக இருக்கிறது. ஏறக்குறைய ஒரு பங்கிற்கு ரூ.103 இழப்பு முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: அதானி குழும பங்குகள் தொடர் சரிவு
இன்று பங்குச்சந்தை தொடங்கியதில் இருந்து இன்னும் மோசமடைந்து எல்ஐசி பங்கு விலை ரூ.591 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லுகள், மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. அதிலிருந்தே எல்ஐசி பங்குமதிப்பு தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகி சரிந்து வருகிறது.
அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது
ஏனென்றால், அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிவால் எல்ஐசியின் முதலீட்டுக்கு என்னவாகும் என்ற அச்சம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் எல்ஐசி பங்கு மதிப்பு நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் 4.23 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது, அதானி போர்ட்ஸில் 9.14 சதவீதமும், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் 5.96% பங்குகளையும் எல்ஐசி வைத்துள்ளது. அதானி குழுமத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் கடந்த வாரத்தில் இருந்து மோசமான சரிவை சந்தித்து வருகின்றன.
அதிலும் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் எப்பிஓ விற்பனையை ரத்து செய்தபின் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு பாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களின் நிலையும் கவலைக்குள்ளாகியுள்ளது.
அதானி என்டர்பிரைசர்ஸ் FPO ரத்துக்கு காரணம் என்ன? மவுனம் கலைத்த கெளதம் அதானி
சந்தை வல்லுநர்கள் கூறுகையில் “ அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் அதிகமான முதலீடு செய்துள்ளதால், சந்தையில் அதானி குழுமத்தின் சரிவுக்கு ஏற்ப எல்ஐசி நிறுவனமும் பாதிக்கப்படும். எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.588 வரை சரியக்கூடும் நிலைமை மோசமானால் ரூ.520வரைகூட செல்லலாம். ஆனால், மீண்டும் நிலைபெற்று ரூ.639வரை வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.