Asianet News TamilAsianet News Tamil

Adani Share: அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது

Adani Share: அதானி குழுமம் இ்ந்தியப் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லுகள், மோசடிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்கள் கடன்பெறுவதற்கு  அதானி குழுமத்தின் பங்குப்பத்திரங்களை அடமானம் பெறுவதை ஸ்விட்சர்லாந்து முதலீட்டு வங்கியான கிரெடிட்(Credit Suisse) சூசி நிறுத்தியுள்ளது.

Credit Suisse no longer accepts bonds from the Adani Group.
Author
First Published Feb 2, 2023, 2:55 PM IST

Adani Share: அதானி குழுமம் இ்ந்தியப் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லுகள், மோசடிகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து தங்கள் வாடிக்கையாளர்கள் கடன்பெறுவதற்கு  அதானி குழுமத்தின் பங்குப்பத்திரங்களை அடமானம் பெறுவதை ஸ்விட்சர்லாந்து முதலீட்டு வங்கியான கிரெடிட்(Credit Suisse) சூசி நிறுத்தியுள்ளது.

Credit Suisse no longer accepts bonds from the Adani Group.

அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எலெக்ட்ரிக்சிட்டி மும்பை ஆகியவற்றின் பங்குப்பத்திரங்கு பூஜ்ஜிய மதிப்பை ஸ்விட்சர்லாந்து முதலீட்டு வங்கியான கிரெடிட்(Credit Suisse) சூசி வழங்கியுள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், கிரெடிட் சூசி தவிர இதர வங்கிகள் அதானி குழுமத்தின் பங்குப்பத்திரங்களை அடமானமாகப் பெற்று வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன. இதன்படி, அதானி போர்ட்ஸ் பத்திரங்களுக்கு 75 முதல் 85% வரை கடன் தரப்படுகிறது.

பட்ஜெட்டா, மளிகைக் கடை பில் மாதிரி இருக்கு: நிர்மலா சீதாராமனை விளாசிய சுப்பிரமணியன் சுவாமி

பொதுவாக ஒரு தனியார் வங்கி கடனளிப்பு மதிப்பை பூஜ்ஜியமாகக் குறைக்கும் போது, வாடிக்கையாளர்கள் பணம் அல்லது வேறு வகையான பிணையத்தை வழங்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்கப்படும்.

Credit Suisse no longer accepts bonds from the Adani Group.

அந்த வகையில் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையால் அதானி குழுமத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குப்பத்திரங்கள் மதிப்பு மோசமாகச் சரிந்து வருகிறது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் சற்று மீண்டாலும் சரிவு தொடர்ந்து வருகிறது

அதானி பவர் நிறுவனத்துக்கு சிக்கல்! கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலி்ல 2வது இடத்தில் இருந்த அதானி 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானியை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி நகர்ந்துள்ளார் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
அதானியின் சொத்துக்களைவிட அம்பானியின் சொத்து மதிப்பு 0.19% அதிகரித்ததையடுத்து, அவரை கோடீஸ்வரர் பட்டியலில்அம்பானி முந்தினார். அதேசமயம், அதானியின் சொத்து மதிப்பு 4.62% சரிந்து 8410 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios