இந்த தொழில்நுட்ப உலகில் பெண்கள் தங்கத்தின் மீதான மோகத்தை கைவிட்டு, ரியல் எஸ்டேட் மற்றும் பங்குசந்தையில் அதிக முதலீடுகளை செய்து வருவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெறிவிக்கிறது.
கையிருப்பில் வைத்துள்ள தங்கத்தை வைத்தே உலகநாடுகள் மதிப்பிடப்படுகின்றன. மேலும், ஆதிகாலம் முதல் இக்காலம் வரையிலும் தங்க நகைகளை விரும்பாத பெண்களே இல்லை என கூறலாம். இந்த நம்பிக்கைகள் இந்த நவீன தொழில்நுட்பயுகத்தில் பொய் என பெண்கள் நிரூபித்து வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் தங்கைத்தை விட ரியல் எஸ்டேட் மற்றும் பங்குசந்தைகளில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டுகின்றனர்.
இக்கால பெண்கள் எதில் அதிக முதலீடு செய்கின்றனர் என்பதை கண்டறியும் விதமாக Anarock Group என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த கள ஆய்வில் சுமார் 2,275 பெண்கள் பங்கேற்று பதிலளித்தனர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் 65 சதவீத பெண்கள் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 20 சதவீத பெண்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் மோகம் தற்போது பெண்களிடையே மவுசு குறைந்து வருவதாக தெரிகிறது.
வெறும் 8 சதவீத பெண்கள் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக Anarock Group வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
ஆய்வில் மேலும் சில சுவாரஸ்ய முடிவுகளும் தெரியவந்துள்ளன. அவை, 83 சதவீத பெண்கள் 45 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட வீடுகளை வாங்குவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர். சுமார் 36 சதவீத பெண்கள் 45 லட்சம் ரூபாய் முதல் 90 லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்ட வீடுகளை வாங்குவதில் விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 27 சதவீத பெண்கள் ஓன்றரை கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சமாக 20 சதவீத பெண்கள் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வீடுகளை வாங்கவும் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
Read More...
Gold Rate Today: தங்க நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. மிஸ் பண்ணிடாதீங்க - இன்றைய நிலவரம்?
Sovereign Gold Bond: தங்கப் பத்திரத் திட்டம் இன்று ஆரம்பம்! தங்கத்தில் முதலீடு செய்ய பொன்னான வாய்ப்பு!
