2.86 ஃபிட்மென்ட் காரணி? மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான 8வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

8th pay commission: How much central government employees salary increase? Rya

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 7-வது ஊதியக் குழுவின் படி ஊதியம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் சம்பள கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் 7-வது ஊதிய குழு அமைத்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதால், 8-வது ஊதிய குழு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழு 10 ஆண்டுகளுக்கு முன்பு UPA அரசாங்கத்தால் பிப்ரவரி 28, 2014 அன்று உருவாக்கப்பட்டது. இது நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது. அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பை மறுபரிசீலனை செய்வதாகும். 10 ஆண்டு காலக்கெடுவை வைத்துப் பார்க்கும் போது, 8வது ஊதியக் குழுவை உருவாக்குவதற்கான நேரம் இது.

வருமான வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு.. இதைத்தானே எதிர்பார்த்தோம்!

ஆனால், 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அரசு செயல்படுகிறதா? 

8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த முன்மொழிவும் இதுவரை அரசிடம் இல்லை என்று நிதியமைச்சகம் சமீபத்தில் கூறியிருந்தது.. இந்த மாத தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார். அதாவது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சுமன் ஆகியோர் இந்த கேள்வியை எழுப்பினர், அதில் அவர்கள் 2025-26 யூனியன் பட்ஜெட்டில் புதிய சம்பள கமிஷன் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதை மத்திய அரசு பார்க்கிறதா என்று கேட்டனர். அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் அவர் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த திட்டமும் தற்போது பரிசீலிக்கப்படவில்லை என்று கூறினார்.

ஜனவரி 1 முதல் அதிரடி மாற்றம்.. UPI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

8வது ஊதியக்குழு ஊழியர்களின் சம்பள உயர்வு

கடந்த சில வாரங்களாக, புதிய ஊதியக் குழுவின் கீழ், 7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 லிருந்து 2.86 ஆக அதிகரிக்கப்படலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன. 2.86 ஆக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிட்மென்ட் காரணியை 2.86 ஆக உயர்த்தினால், தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.18,000 ரூ.51,480 ஆக அதிகரிக்கப்படும். ஃபிட்மென்ட் காரணி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முறையே திருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பெருக்கல் அலகு ஆகும்.

8வது ஊதியக் குழுவின் கீழ் 2.86 ஃபிட்மென்ட் காரணி பற்றி  தொடர்ந்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஷிவ் கோபால் மிஸ்ரா, கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் தேசிய கவுன்சில் அல்லது JCM இன் செயலாளர் (ஊழியர் தரப்பு) கூறியதை அடுத்து. கடந்த மாதம் ஒரு நேர்காணலில், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் அடுத்த செட் மறுசீரமைப்பிற்கு "குறைந்தது 2.86" என்ற பொருத்தம் காரணி எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios