GST Evasion:ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 719 பேர் கைது! ரூ.55,575 கோடி கண்டுபிடிப்பு
கடந்த 2 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவகையில் 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரத்து 575 கோடி மீட்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவகையில் 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரத்து 575 கோடி மீட்கப்பட்டுள்ளது என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 22,300 போலி ஜிஎஸ்டிஐஎன் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு! 2 நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, போலியாக ரசீதி அளித்தல், போலியாஸ இன்வாய்ஸ் அளித்தல், இன்புட் டேக்ஸ் கிரெடிட் எடுத்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் வகையில் கடந்த 2020ம் ஆண்டு, நவம்பர் 9ம் தேதி தேசிய அளவில் சிறப்பு நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு எடுத்தது.
இந்த நடவடிக்கையில், ஜிஎஸ்டி மற்றும் இன்புட் கிரெடிட் ஏமாற்றிய வகையில் ரூ.55 ஆயிரத்து 575 கோடி அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் பட்டயக்கணக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலக்கட்டத்தில் தாமாக முன்வந்து ரூ.3,050 கோடியை வர்த்தகர்கள் செலுத்தியுள்ளனர். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை, ஆனால், குறிப்பிடத்தகுந்த அளவில் பணம் இருக்கும் எனத் தெரிவித்தனர்.
11ஆயிரம் பேர் நீக்கம்! ஹெச்1பி விசாவில் வந்து வேலையிழந்தவர்களுக்கு உதவுகிறது மெட்டா
நம்பத்தகுந்த புலனாய்வு தகவல், வருவாய் புலனாய்வு, வருமானவரி துறை, அமலாக்கப்பிரிவு, டிஆர்ஐ, சிபிஐ ஆகியோரின் உதவியாலும், ஒத்துழைப்பாலும் வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்புகளை குறைக்கவும் ஜிஎஸ்டி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி பதிவு, இ-வே பில், ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல், ஜிஎஸ்டி வரி செலுத்தியது ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பணமதிப்பிழப்பு(Demonetisation)! இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு: நோக்கம் நிறைவேறியதா? உண்மை வெளிவருமா?
தேசிய அளவில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு, வரி ஏய்ப்பாளர்களைக் கண்டறிந்து வருவதால்தான் ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய், 2வது அதிகபட்சத்தை எட்டி, ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில்தான் உட்சபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடியாக அதிகரித்தது. கடந்த 8 மாதங்களில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைத் தொட்டுவருகிறது, இரு மாதங்களில் ரூ.1.50 லட்சம் கோடியை எட்டியுள்ளது. குறிப்பிடத்தக்கது.