Asianet News TamilAsianet News Tamil

indian railways: ரயில்வே டிடிஇக்கு வழங்கப்பட்ட ‘புதிய கருவி’யால் தினசரி 7,000 பயணிகளுக்கு படுக்கை வசதி

ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்ககப்பட்ட கையடக்க நவீன கருவியால் தினசரி 7 ஆயிரம் பயணிகளுக்கு படுக்கை வசதியை ஒதுக்க முடிகிறது.

7000  berths are allotted each day by a "HHT tool" made available to the Railway TTE.
Author
First Published Sep 19, 2022, 9:08 AM IST

ரயில்வே டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்ககப்பட்ட கையடக்க நவீன கருவியால் தினசரி 7 ஆயிரம் பயணிகளுக்கு படுக்கை வசதியை ஒதுக்க முடிகிறது.

இரவு நேரங்களிலும், நீண்டதொலைவு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் தங்களுக்கு படுக்கைவசதி பெறவும், இருக்கை வசதி பெறவும் டிக்கெட் பரிசோதகர்களை நாடுவார்கள்.

கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு: லோன் கிடைத்த மறுநாள் அதிர்ஷ்டம்

7000  berths are allotted each day by a "HHT tool" made available to the Railway TTE.

 அவர் ஒவ்வொரு பெட்டியாக டிக்கெட்டை பரிசோதனை செய்துவிட்டு, டிக்கெட்டை ரத்து செய்த பயணி விவரம், பயணத்துக்கு வராத பயணிகள் விவரத்தை தெரிந்து கொண்டு, நீண்டநேரத்துக்குப்பின் படுக்கை அல்லது இருக்கையை பயணிக்கு ஒதுக்குவார். 

இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர்களின் பணியை எளிமைப்படுத்தவும், டிக்கெட் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கவும் ரயில்வே துறை சார்பில் கையடக்க கருவியை கடந்த 4 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த கருவியை  ரயில்வே துறையே தயாரித்தது இந்த கருவிக்கு, ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்(HHT) என்று பெயரிடப்பட்டது. 

ஐ-பாட் வடிவத்தில் இருக்கும் ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் கருவியில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் விவரங்கள் ஒவ்வொரு பெட்டிவாரியாக வந்துவிடும். இந்த கருவி ரயில்வே சர்வரில் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால், பயணத்துக்கு வந்த பயணிகள், டிக்கெட்டை ரத்து செய்தோர், கடைசி நேரத்தில் ரத்து செய்தோர் விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். உடனுக்குடன் இந்தக் கருவி அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்துவிடும். 

பிரதமர் நரேந்திர மோடி : இந்தியாவின் புதிய படைப்பாற்றல் மிக்கவர் !

7000  berths are allotted each day by a "HHT tool" made available to the Railway TTE.

இந்த ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் கருவியில் டிக்கெட் பரிசோதகர் தான் ஆய்வுசெய்யும் ரயிலில் எத்தனை டிக்கெட் காலியாக இருக்கிறது, ரத்து செய்தோர் விவரங்களை தேடினால் உடனுக்குடன் வந்துவிடும். இதன் மூலம் ஆர்ஏசி மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உடனுக்குடன் இருக்கை அல்லது படுக்கை வசதியைஒதுக்க முடிகிறது. 

கடந்த 4 மாதங்களில் மட்டும் தினசரி சராசரியாக ஆர்ஏசி பயணிகளில் 5,450 பேருக்கும், காத்திருப்பு  பட்டியலில் 2,750 பயணிகளுக்கும்  என மொத்தம் 7ஆயிரம் பயணிகளுக்கு கடைசி நேரத்தில் இருக்கை வசதி தரப்பட்டுள்ளது.

நெட்டில் லீக்கான கல்லூரி மாணவிகளின் குளியல் வீடியோக்கள்.. போராட்டத்தில் குதித்த ஹாஸ்டல் மாணவிகள்.!!

மேலும், பயன்படுத்தப்படாத 7ஆயிரம் காலி படுக்கைகள் தினசரி ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் கருவியால் பயணிகளுக்கு முன்பதிவுக்கு வழங்கப்படுகின்றன. ரயில் சென்று கொண்டிருக்கும்போதே, அடுத்த ரயில் நிலையத்திலிருந்து ஒரு பயணிக்கு படுக்கை அல்லது இருக்கை வசதி ஒதுக்க முடியும்.  

தற்போது 1,390 டிக்கெட் பரிசோதகர்களுக்கு 10,745 ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் கட்டணம், அபராதம், போன்றவை வசூலிக்கவும், ரசீது வழங்கவும் இந்த கருவி மூலம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios