இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2022 ஸ்கவுட் ரோக் மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.
இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2022 ஸ்கவுட் ரோக் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் நான்காவது 1,133சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 19 இன்ச் முன்புற வீல், மினி-ஏப் ஹேண்டில்பார், வளைந்த ரியர் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பிளாக்டு-அவுட் என்ஜின், எக்சாஸ்ட், ஹேண்டில்பார்கள் மற்றும் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. பிளாக்டு-அவுட் பிட்களுக்கு ஏற்ப ரோக் மாடல் டார்க நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2022 ஸ்கவுட் ரோக் மாடல்- பிளாக் மெட்டாலிக், பிளாக் ஸ்மோக், பிளாக் ஸ்மோக் மிட்நைட், சேக்பிரஷ் ஸ்மோக், ஸ்டெல்த் கிரே மற்றும் ஸ்டாம் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ரோக் மாடலில் 1,133சிசி, வி-டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிக்கிபேக் ஷாக்-களை விரும்புவோர் பொருத்திக் கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 129mm அளவிலும், சீட் உயரம் 649mm அளவிலும் இருக்கிறது.
சர்வதேச சந்தையில் 2022 இந்தியன் ஸ்கவுட் ரோக் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
