EVயிலிருந்து CNGக்கு மாறும் ட்ரெண்ட்.. Jupiter 125ஐ வைத்து புது பிளான் போடும் TVS - என்ன அது? லேட்டஸ்ட் தகவல்!
TVS Jupiter 125 : அண்மையில் உலகத்திலேயே முதல் முறையாக பிரபல பஜாஜ் நிறுவனம், இந்தியாவில் CNGயில் இயங்கும் இருசக்கர வாகனம் ஒன்றை அறிமுகம் செய்தது, அது ஒரு ஹைபிரிட் வாகனம்.
அண்மையில் பஜாஜ் ஆட்டோஸ் நிறுவனம், உலகின் முதல் CNG மோட்டார் சைக்கிளான "ஃப்ரீடம் 125"ஐ அறிமுகப்படுத்திய நிலையில், பஜாஜின் மிக நெருங்கிய போட்டியாளரான TVS மோட்டார் நிறுவனம், உலகளவில் முதல் "CNG ஸ்கூட்டர்" உற்பத்தியாளராக மாற திட்டமிட்டுள்ளது. அதுவும் அடுத்த ஆண்டே அதை செய்லபடுத்த பணிகள் நடக்கிறது.
TVS மோட்டார் நிறுவனம், கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது கிடைத்துள்ள சில நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி, அந்த நிறுவனம் CNG மாடல் ஸ்கூட்டர்களை உருவாக்க திட்டமிட்டு, அதை செயல்படுத்தியும் வருகின்றது.
125cc CNG ஸ்கூட்டரான அந்த புதிய திட்டத்திற்கும், TVS நிறுவனம் Code U740 என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்கள் பணிகள் எல்லாம் சரியாக நடந்தால், இந்த 2024ம் ஆண்டின் கடைசி காலாண்டில் அந்த CNG ஸ்கூட்டர்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்படலாம். அப்டியே சில காலம் தேவைப்பட்டாலும், 2025ம் ஆண்டின் முதல் பாதிக்குள் இந்த பணிகள் நிச்சயம் துவங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது TVS.
மேலும் TVS நிறுவனம், மாதம் ஒன்றுக்கு சுமார் 1,000 யூனிட் எரிவாயு அடிப்படையிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரு சக்கர எலக்ட்ரிக் வாகன விற்பனை இந்தியாவில் சூடுபிடித்துள்ள நிலையில், இப்பொது இரு சக்கர CNG வாகனங்களின் விற்பனையும் விரைவில் அதிகரிக்கவுள்ளது.
பஜாஜ் நிறுவனம் தான் உலகின் முதல் CNGயால் செயல்படும் இரு சக்கர வாகனத்தை தயாரித்து, அதை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றது. இந்த சூழலில், உலகின் முதல் CNG மூலம் இயங்கும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய முயற்சி செய்து வருகின்றது.
அதிகம் விற்பனையான முதல் 5 ஸ்கூட்டர்கள்.. எந்தெந்த பிராண்டுகள் இருக்கு? முழு லிஸ்ட்!