குறைந்த பட்ஜெட்டில் சிறந்த மின்சார ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? Ola Gig, Komaki XGT KM, Zelio Knight+, Evolet Pony, Odysse HyFy ஆகிய 5 சிறந்த லோ-பட்ஜெட் e-Scooters பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
சிறிய பட்ஜெட்டில் மின்சார ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு, 60 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் சில நல்ல தேர்வுகள் இந்தியாவில் உள்ளன. பெட்ரோல் விலை அதிகரிப்பும், பராமரிப்பு செலவும் குறைய வேண்டுமென்றால் இவை சிறந்த மாற்று வழி. கீழே 5 சிறந்த லோ-பட்ஜெட் e-Scooters பட்டியல் தரப்பட்டுள்ளது.
முதலில் Ola Gig. விலை ரூ.39,999 முதல் 49,999 வரை. இந்த மாடலில் 100 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் கிடைக்கும். பேட்டரி சுவாப்பிங் வசதி இருப்பதால், நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அல்லது டெலிவரி வேலை செய்பவர்கள் இதை அதிகம் விரும்புவர்.
அடுத்ததாக Komaki XGT KM. சுமார் ரூ.59,999 விலை கொண்ட இது, ஒரு சார்ஜில் 60–65 கிலோமீட்டர் செல்லும். குறைந்த வேக வாகனம் என்பதால் லைசன்ஸ், ரெஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை. பராமரிப்பு எளிது என்பதால் மாணவர்கள் மற்றும் சிட்டி ரைடர்களுக்கு சரியான தேர்வு.
Zelio Knight+ ரூ.59,990 விலைக்கு கிடைக்கிறது. ஒரு சார்ஜில் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. இதன் சிறப்பு என்னவென்றால் க்ரூஸ் கன்ட்ரோல் (Cruise Control) போன்ற வசதி உள்ளது. இதனால் சுலபமாகவும் சுகமாகவும் பயணம் செய்யலாம்.
Evolet Pony விலை சுமார் ரூ.57,999. ரேஞ்ச் சுமார் 80 கிலோமீட்டர். ஆனால் இந்த விலையில் டிஸ்க் பிரேக், அலாய் வீல், டிஜிட்டல் டிஸ்ப்ளே, USB சார்ஜிங், மொபைல் ஆப் இணைப்பு, e-ABS போன்ற அம்சங்கள் தரப்படுகின்றன. ஸ்டைலிஷ் லுக்கோடு டெக் அம்சங்கள் விரும்புவோருக்கான நல்ல ஆப்ஷன்.
மிகக் குறைந்த விலையில் Odysse HyFy ரூ.42,000. ஒரு சார்ஜில் சுமார் 70 கிலோமீட்டர் செல்லும். அடிப்படை அம்சங்களோடு சிட்டி யூசர்ஸ், புதிய EV பயனர்களுக்கு “என்ட்ரி லெவல்” தேர்வாக இருக்கும்.
மொத்தத்தில் பார்க்கும்போது, அதிக ரேஞ்ச் தேவைப்படுபவர்கள் Ola Gig, Zelio Knight+ எடுக்கலாம். வசதிகள் அதிகம் வேண்டும் என்றால் Evolet Pony. குறைந்த பட்ஜெட் அல்லது ஸ்டார்டிங் யூசர்ஸ் என்றால் Odysse HyFy. லைசன்ஸ் சிக்கலின்றி சுலபமாக பயன்படுத்த வேண்டுமென்றால் Komaki XGT KM சிறந்த தேர்வு ஆகும். இவை 60 ஆயிரத்திற்குள் கிடைக்கிறது.
