மாருதி வாகன்ஆர் EMI சலுகை.. குறைந்த விலையில் கார் வாங்கும் வாய்ப்பு
மாருதி சுசூகி வாகன்ஆர், சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட மலிவு விலை கார். மாத EMI சுமார் ரூ.10,319. 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் எஞ்சின் உடன் கிடைக்கின்றன.

மாருதி சுசூகி வாகன்ஆர்
இந்தியாவில் மலிவு விலையில் சிறந்த செயல்திறன், மைலேஜ் மற்றும் பராமரிப்பு எளிமைக்காக பிரபலமான கார்களில் ஒன்று மாருதி சுசூகி வாகன்ஆர் (WagonR). சிறிய குடும்பங்களுக்கு மிகவும் பொருத்தமான இந்த கார், தற்போது ஆன்-ரோடு விலை (டெல்லி) சுமார் ரூ.6.97 லட்சம். ஆரம்ப விலை ரூ.5.79 லட்சம் என்ற நிலையில், EMI-யில் வாங்க விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கின்றன.
சுசூகி வாகன்ஆர்
நீங்கள் VXI பெட்ரோல் மாடல் தேர்வு செய்தால், இதன் ஆன்-ரோடு விலை ரூ.6,97,084 ஆகும். இதில் நீங்கள் ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்தினால், தொகைக்கு 9% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு EMI கட்டணம் மாதம் சுமார் ரூ.10,319 ஆகும். மொத்த கடன் தொகை ரூ.4,97,084 ஆகும்; காலக் கட்டத்தில் வங்கி வட்டி சேர்த்து நீங்கள் செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.6,19,140 ஆகும். மாத வருமானம் ரூ.30,000 இருந்தாலே இந்த காரை EMI திட்டத்தில் எளிதாக வாங்க முடியும்.
வாகன்ஆர் அம்சங்கள்
மாருதி சுசூகி வாகனத்தில் இரண்டு வகை பெட்ரோல் எஞ்சின் விருப்பங்கள் உள்ளன – 1.0 லிட்டர் 3 சிலிண்டர் மற்றும் 1.2 லிட்டர் 4 சிலிண்டர். 1.0 லிட்டர் எஞ்சின் 25.19 கிமீ/லி மைலேஜ் தருகிறது. CNG வேரியண்ட் (LXI & VXI) 34.05 km/kg வரை மைலேஜ் தரும். 1.2 லிட்டர் K-Series எஞ்சின், ZXI & ZXI+ AGS டிரிம்களில் 24.43 km/l மைலேஜ் வழங்குகிறது. இதனால், செலவில் சிக்கனத்துடன் பயணம் செய்ய விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகும்.
முக்கிய விவரங்கள்
இந்த காரின் மிகப்பெரிய பலம், அதன் விசாலமான கேபின் ஸ்பெஸ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு. பாதுகாப்பு அம்சங்களில் இரட்டை ஏர்பேக், ABS உடன் EBD, ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை அடங்கும். அதோடு, AMT வேரியண்டில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் கூட உள்ளது.
அதிக மைலேஜ்
காரின் உள்ளே 7 அங்குல டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ (நேவிகேஷனுடன்), கிளவுட் சேவை, 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மவுண்டட் ஸ்டீரிங் கண்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற நவீன அம்சங்கள் உள்ளன. இதனால், குறைந்த விலை, அதிக மைலேஜ், வசதியான பயணம் மூன்றையும் விரும்புபவர்களுக்கு WagonR சரியான தேர்வு ஆகிறது.