அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இறுதியில் இந்தியாவில் அவர்களின் முதல் ஷோரூமை திறப்பதற்கான இடத்தை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா?

எலான் மஸ்க்கின் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்திய சந்தையில் கால் பதிக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், கடந்த சில வாரமாக இந்த வெயிட்டிங் சீக்கிரமாக முடிய போகுதுன்னு சில நியூஸ் வந்துச்சு. இப்போ அமெரிக்க எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா இந்தியாவோட முதல் ஷோரூமுக்கான இடத்தை உறுதி பண்ணிட்டதா புது ரிப்போர்ட்ஸ் சொல்லுது. இந்தியாவோட முதல் ஷோரூமுக்காக நிறுவனம் மும்பையில் ஏறத்தாழ 4,000 சதுர அடி இடத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் மேக்சிட்டி-ல டெஸ்லா அவங்களோட முதல் ஷோரூமை திறக்க போறதா ஹிந்துஸ்தான் டைம்ஸ் ரிப்போர்ட் பண்ணிருக்கு. ஷோரூமோட மாச வாடகை எவ்ளோன்னு தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க. இதோட மாச வாடகை 35 லட்சம் ரூபா. ஏறத்தாழ 3,000 சதுர அடி பரப்பளவுல இருக்குற கார் ஷோரூம் மேக்கர் மேக்சிட்டியோட கமர்ஷியல் டவரோட கீழ்தளத்துல இருக்கு. 

மும்பைல இருக்குற பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் இல்லனா பி.கே.சி தான் நாட்டோட ரொம்ப காஸ்ட்லியான கமர்ஷியல் ரியல் எஸ்டேட் சென்டர். பி.கே.சி-ல முதல் ஷோரூம் திறக்குறதுக்கான அக்ரிமென்ட்ட டெஸ்லா பைனல் பண்ணிட்டதா ப்ராப்பர்ட்டி மார்க்கெட் வட்டாரத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா ரிப்போர்ட் பண்ணிருக்கு. இதுக்காக பி.கே.சி-ல இருக்குற ஒரு கமர்ஷியல் டவரோட கீழ்தளத்துல 4,000 சதுர அடி இடத்தை நிறுவனம் வாடகைக்கு எடுத்துருக்கு. சதுர அடிக்கு 900 ரூபா மாச வாடகையாம். அதாவது மாசம் ஏறத்தாழ 35 லட்சம் ரூபா வரும். 

வாகன துறையில இதுவரைக்கும் நடந்ததிலேயே ரொம்ப காஸ்ட்லியான ஷோரூம் வாடகை டீல் இதுதான்னு ரிப்போர்ட்ஸ் சொல்லுது. டெஸ்லா இந்த இடத்தை அஞ்சு வருஷத்துக்கு வாடகைக்கு எடுத்துருக்காங்கன்னு ரிப்போர்ட்ஸ் சொல்லுது. அங்க கம்பெனி அவங்களோட கார்களோட நிறைய வெரைட்டிய டிஸ்ப்ளே பண்ணுவாங்க. ஏப்ரல் மாசத்துல இருந்து கம்பெனி கார்கள் விக்க ஆரம்பிக்க சான்ஸ் இருக்கு. மும்பைக்கு வெளியில டெல்லிலயும் ஒரு ஷோரூம் திறக்க டெஸ்லா பிளான் பண்ணிட்டு இருக்காங்க. இதுக்காக நிறுவனம் டெல்லில இருக்குற ஏரோசிட்டில ஒரு ஷோரூமுக்காக இடம் தேடிட்டு இருக்காங்க. அதோட சைஸ் மும்பையை விட பெருசா இருக்கும். டெல்லி ஷோரூமுக்காக டெஸ்லா 4,000 சதுர அடி இடம் ஒதுக்கி இருக்காங்க. இதோட வாடகை மாசம் 25 லட்சம் ரூபா இருக்கும். 

புது டெல்லில இருக்குற இந்திரா காந்தி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு (ஐ.ஜி.ஐ) பக்கத்துல இருக்குற ப்ரூக்ஃபீல்ட் ப்ராப்பர்ட்டில இருக்குற ஏரோசிட்டி ஏரியால டெஸ்லா ஷோரூம் திறக்க போறதா வட்டாரங்கள் தெரிவிச்சுருக்காங்க. ஆனாலும் இது சம்பந்தமா நிறுவனம் இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமா எந்த தகவலும் சொல்லல. டெஸ்லா கார்கள் உலகம் முழுக்க ரொம்ப ஃபேமஸ். எலான் மஸ்க் ரொம்ப நாளா இந்திய மார்க்கெட்ல நுழைய பிளான் பண்ணிட்டு இருந்தாரு. இருந்தாலும் வரிவிதிப்பு காரணமா ஒரு முடிவுக்கு வர முடியல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம நாட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு யூ.எஸ் டூர் போயிருந்தாரு. அங்க அவர் எலான் மஸ்க்கை பாத்தாரு. இந்த மீட்டிங்க்கு அப்புறம்தான் இந்தியாவோட டெல்லி, மும்பை, பூனே மாதிரியான சிட்டிஸ்ல இருக்குற நிறைய போஸ்ட்டுகளுக்கான வேகன்சிய டெஸ்லா அறிவிச்சாங்க. 

இதுக்காக நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த இடங்களுக்கான 13 போஸ்ட்டுக்கு அப்ளிகேஷன்ஸ் கூப்பிட்டு இருந்தாங்க. அதே சமயம் மும்பை ஷோரூமோட பைனல் லுக் வெளிய வந்ததால டெஸ்லா சீக்கிரமே இந்தியால கார்கள் ரிலீஸ் பண்ண முடியும்னு உறுதியா சொல்லலாம். இதுக்கு வெளியில இந்தியன் கவர்மெண்ட் சீக்கிரமே எலக்ட்ரிக் வாகன கொள்கையில சேஞ்சஸ் கொண்டு வரலாம்னு ரிப்போர்ட்ஸ் இருக்கு. வெளிநாட்டுல இருந்து வர்ற கார்களோட கஸ்டம்ஸ் டியூட்டிய 15 சதவீதமா குறைக்க மூவ் பண்ணிட்டு இருக்காங்க. இதுல இருந்து ரொம்ப பெரிய லாபம் டெஸ்லாக்கு தான் கிடைக்கும். இதனால கம்பெனி கம்மியான விலைக்கு இந்தியால கார்கள் லான்ச் பண்ண முடியும்.