டாடா நெக்ஸான் ஈவி 45 புது அப்டேட்களோடு சந்தையில் வந்துள்ளது. 489 கிலோமீட்டர் வரைக்கும் ரேஞ்சும், செம தள்ளுபடியும் இதன் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

Tata Nexon EV: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன வரிசையில மிகவும் பிரபலமான மாடல் நெக்ஸான் ஈவி. பெரிய பேட்டரி பேக், அதிக பவர், அதிகமான வசதிகளோடு நிறுவனம் இதனை அப்டேட் செய்துள்ளது. தற்போது நெக்ஸான் ஈவி காரின் 2024 எடிஷனுக்கு 40,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீன் போனஸ், எக்ஸ்சேஞ்ச் போனஸ், ஸ்கிராப்பேஜ் போனஸ் என ஏகப்பட்ட சலுகைகள் இந்த தள்ளுபடி பட்டியலில் உள்ளது. இந்த ஆஃபர் மார்ச் 31 வரை தான் உள்ளது.

நெக்ஸான் ஈவியில் 45kWh பேட்டரி பேக் உள்ளது. இந்த புது பேட்டரி பேக் 15% அதிக எனர்ஜி டென்சிட்டி கொண்டது என நிறுவனம் தெரிவிக்கிறது. அதனால் 40.5kWh யூனிட் இருக்கின்ற அதே இடத்தில் இதுவும் இருக்கும். ஆனால் எடை சற்று அதிகம். இதற்கு ஏஆர்ஏஐ சான்றிதழ் 489 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கியுள்ளது. இது 40.5kWh யூனிட்டை விட 24 கிலோமீட்டர் அதிகம். நெக்ஸான் ஈவி 45-ஓட உண்மையான C75 சைக்கிள் ரேஞ்ச் 350ல் இருந்து 370 கிலோமீட்டர் வரைக்கும் இருக்கும் என டாடா உறுதி அளிக்கிறது. நிறுவனத்தின் C75 சைக்கிள் உண்மையான டிரைவிங் ரேஞ்சை பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது.

டாடா நெக்ஸான் ஈவியின் டிசைன் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த டாடா காரின் முன்பக்கம் புதிதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. எல்இடி ஸ்ப்ளிட் ஹெட்லைட்களோடு டிஆர்எல்களும் கார் முன்னாடி உள்ளது. முக்கியமான ஹெட்லைட் கிளஸ்டர் அதற்கு கீழ் உள்ளது. இதன் கூர்மையான பம்பரின் ஓரத்தில் ஏர் கர்டன்ஸ் உள்ளது. எல்இடி லைட்களோடு டெயில்கேட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸானுக்கு 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கிடைத்துள்ளது. 

டாடா நெக்ஸான் ஈவி ஒருமுறை சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. வெறும் 8.9 வினாடிகளில் 0ல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்த காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. அதனால் கார முழுமையாக சார்ஜ் செய்ய 56 நிமிடம் ஆகும். ஆனால் இப்போது சந்தையில் வரக்கூடிய கார் இதை விட சீக்கிரமாக சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. டாடா ஈவியில் V2V சார்ஜிங் வசதி உள்ளது. அதனால் இந்த கார் வேற எலக்ட்ரிக் கார் வெச்சு கூட சார்ஜ் செய்யலாம். இதன் V2L டெக்னாலஜியை பயன்படுத்தி காரை சார்ஜ் செய்யலாம். இதன் மூலமாக எந்த கேட்ஜெட்ல் இருந்து வேணாலும் இந்த கார சார்ஜ் செய்ய முடியும்.

பெரிய பேட்டரி வெச்சு அப்டேட் பண்ண நெக்ஸான் ஈவி 5 எச்பி அதிகமா கொடுக்குது. இதுல புது பனோரமிக் சன்ரூஃப் இருக்கு. 40.5kWh யூனிட்டுக்கு 10ல இருந்து 80% வரைக்கும் சார்ஜ் ஆகுற டைம் 56 நிமிஷத்துல இருந்து 48 நிமிஷமா குறைஞ்சிருக்கு. கிரியேட்டிவ், ஃபியர்லெஸ், எம்பவர்டு, எம்பவர்டு+, ரெட் டார்க்னு நிறைய வேரியண்ட்ஸ்ல நெக்ஸான் ஈவி வாங்கலாம்.

கவனிக்கவும், வேற வேற பிளாட்ஃபார்ம் உதவியோட கார்ல கிடைக்கிற தள்ளுபடிகள் மேல சொல்லியிருக்கோம். இந்த தள்ளுபடிகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு ஏரியாவுக்கும், ஒவ்வொரு சிட்டிக்கும், டீலர்ஷிப்புக்கும், ஸ்டாக்குக்கும், கலருக்கும், வேரியண்ட்டுக்கும் ஏத்த மாதிரி மாறும். அதனால இந்த தள்ளுபடி உங்க சிட்டியிலயோ, டீலர்லயோ கூடவோ, குறைச்சலோ இருக்கலாம். அதனால கார் வாங்குறதுக்கு முன்னாடி உங்க பக்கத்துல இருக்குற டீலர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க.