இந்தியாவின் முதல் டர்போ என்ஜின் கொண்ட சிஎன்ஜி கார்! விலையும் கம்மிதான்!
டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரின் விலை ரூ. 70,000 முதல் ரூ.80,000 ஆக இருக்கும். இது மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியுடன் நேரடியாக போட்டியிடும்.
டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் 7ஆம் தேதி Curvv EVக்கான விலையை வெளியிட்டது. Curvv இன் இன்டர்னல் கம்பஷன் எஞ்சின் வேரியண்ட்டை செப்டம்பர் 2ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டிற்குள் மற்றொரு புதிய SUV ஐ டாடா அறிமுகப்படுத்த உள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல், டாடா கர்வ் மற்றும் ஹாரியர் EV மற்றும் நெக்ஸான் iCNG கான்செப்ட் ஆகியவற்றின் தயாரிப்புக்கான மாடல்களை வழங்கியது. ஹாரியர் EV ஏற்கனவே 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நெக்ஸான் சிஎன்ஜி வரும் வாரங்களில் சந்தைக்கு வரவுள்ளது.
இந்தியாவில் இரட்டை சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய அளவிலான வாகனங்களை டாடா அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில், ஹூண்டாய் இந்த தொழில்நுட்பத்தை எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவியில் பயன்படுத்தியது. இந்த வரிசையில், டாடா பஞ்ச் அதிகம் விற்பனையாகும் மாடலாக தனித்து நிற்கிறது. ஏற்கனவே CNG மாடலும் கிடைக்கிறது.
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா? கண்டிப்பா இந்த 5 விஷயத்த நோட் பண்ணுங்க...
இதற்கு நேர்மாறாக, நெக்ஸான் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. இருந்தாலும் முதல் பத்து இடங்களில் இருக்கிறது. மேலும் இப்போது இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ளது. டாடா நெக்ஸான் சிஎன்ஜி காம்பாக்ட் எஸ்யூவியின் வரிசையில் புதுவரவாக இருக்கும். அதிக எரிபொருள் சேமிப்புத் திறன் கொண்ட காரை விரும்புவோருக்கு ஏற்றதாக இருக்கும். இதில் பஞ்ச் மற்றும் ஆல்ட்ரோஸ் இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி மாடல்களில் உள்ளதைப் போன்ற ஒரு உத்தியைப் பயன்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பில் இரண்டு சிலிண்டர்களும் ஒன்றுக்கொன்று இணையாக வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த சிலிண்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மறைவாக இருக்கும்.
சிஎன்ஜி மாடலில் மைக்ரோ ஸ்விட்ச், ஆறு-புள்ளி சிலிண்டர் மவுண்டிங் செட்டப், ஒற்றை ஈசியூ யூனிட் ஆகியவை உள்ளன. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், பொதுவாக 120 PS மற்றும் 170 Nm உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின் ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
டாடா நெக்ஸான் சிஎன்ஜி வேரியண்டின் விலை ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை இருக்கும். இது மாருதி சுசுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியுடன் நேரடியாக போட்டியிடும்.
பட்டைய கிளப்பும் புதிய ஹீரோ கிளாமர் 125! ஏர் கூல்டு எஞ்சினுடன் ஒரு மைலேஜ் பைக்!