Asianet News TamilAsianet News Tamil

பட்டைய கிளப்பும் புதிய ஹீரோ கிளாமர் 125! ஏர் கூல்டு எஞ்சினுடன் ஒரு மைலேஜ் பைக்!

புதுப்பிக்கப்பட்ட இந்த 2024 ஹீரோ கிளாமர் பைக் புதிய வண்ணங்களையும் கூடுதல் அம்சங்களையும் பெற்று பல அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்களில் முக்கியமான சில மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Hero Glamour 2024 unveiled at starting price of Rs 83,598 sgb
Author
First Published Aug 25, 2024, 5:22 PM IST | Last Updated Aug 25, 2024, 5:41 PM IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் பைக்கின் 2024 பதிப்பு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.83,598 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ.1,000 மட்டும் அதிகரித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்த 2024 ஹீரோ கிளாமர் பைக் புதிய வண்ணங்களையும் கூடுதல் அம்சங்களையும் பெற்று பல அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட்களில் முக்கியமான சில மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஹீரோ கிளாமர் தொடர்ந்து அதே என்ஜினைக் கொண்டுள்ளது. அதன் கம்யூட்டர் வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் இப்போது புதிய பிளாக் மெட்டாலிக் சில்வர் பெயிண்ட்டுடன் வந்திருக்கிறது.

பட்டி தொட்டி எல்லாம் தூள் பறக்கும் சேல்ஸ்! மாருதி சுஸுகியின் வெற லெவல் பிளான்!!

கூடுதலாக, இது ஒரு புதிய LED ஹெட்லேம்ப், டேஞ்சர் லைட் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்டார்ட்-ஸ்டாப் சுவிட்ச் ஆகியவற்றுடன் வருகிறது. 2024 கிளாமர் 125, பிளாக் மெட்டாலிக் சில்வர் என்ற புதிய வண்ணத்திலும் கிடைக்கிறது. இது தற்போதுள்ள கேண்டி பிளேசிங் ரெட், பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பிளாக் டெக்னோ ப்ளூ ஆகியவற்றுடன் சேர்கிறது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவையும் இந்த பைக்கில் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் 10.72 ஹெச்பி மற்றும் 10.6 என்எம் பீக் டார்க் உற்பத்தி செய்யும் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் 50-60 கி.மீ. மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

சஸ்பென்ஷன் அமைப்பில் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ரியர் ஷாக் உள்ளது. அதே சமயம் பிரேக்கிங் அமைப்பு இரு முனைகளிலும் டிரம் பிரேக்குகளைக் கொண்டிருக்கிறது. டாப் வேரியண்டில் மட்டும் முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரிம் பிரேக்கைக் கொண்டுள்ளது.

கடனுக்கு EMI கட்டத் தவறினால் என்ன செய்ய வேண்டும்? சில எளிமையான டிப்ஸ்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios