விரைவில் இந்தியாவில் அறிமுகம்.. 776ccயில் ஒரு பைக்கை களமிறக்கும் Suzuki - V-Strom 800DEன் விலை என்ன தெரியுமா?
Suzuki V-Strom 800DE - பிரபல சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் அதிவிரைவில் ஒரு புதிய 776cc திறன்கொண்ட ஒரு பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிரபல சுசூகி நிறுவனம், இன்னும் சில நாட்களில் V-Strom 800DE அட்வென்ச்சர் என்ற மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜப்பானிய உற்பத்தியாளராண சுசூகி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் V-Strom 800 DEஐ காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. V-Strom 800DE ஆனது 83bhp மற்றும் 78Nm வழங்கும் 776cc, பேரலல்-ட்வின் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இதன் இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் அம்சங்களைப் பொறுத்தவரை, ADV ஆனது ஐந்து அங்குல TFT டிஸ்ப்ளே, இழுவைக் கட்டுப்பாடு, உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. 21 இன்ச் முன் மற்றும் 17 இன்ச் பின் (டன்லப் டிரெயில்மேக்ஸ் மிக்ஸ்டூர்) டயர்களுடன் இதன் இயங்குகிறது.
லைசென்ஸ் தேவையில்லை.. ரூ.50 ஆயிரம் மட்டுமே.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சிறந்த வாய்ப்பு..
இதற்கு முன்னதாக வெளியான V-Strom 650XT போலல்லாமல், 800DE ஆனது நவீன மிடில்வெயிட் ADV டூரிங் பைக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு ரைடிங் மோடுகள் உட்பட விரிவான எண்ணிக்கையிலான மின்னணு Upgrade இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சுமார் 10 முதல் 11 லட்சம் என்ற விலையில் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
V-Strom 800DE இன்னும் சில நாட்களில் அறிமுகமாவுள்ள நிலையில், பிஎம்டபிள்யூ 850 ஜிஎஸ் மற்றும் ட்ரையம்ப் டைகர் 900 ஆகிய இரு பைக்குகளுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுசூகி நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய சந்தையில் தனது பைக் மற்றும் கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிக மைலேஜ் கொடுக்கும் டாடாவின் இந்த மலிவான ஹேட்ச்பேக் காரை வெறும் 1 லட்சத்திற்கு வாங்குங்க..