டாடா கார் வாங்க போறீங்களா? முதலில் பாதுகாப்பு சோதனை முடிவுகளை செக் பண்ணுங்க!
டாடா கார் வாங்கப் போறீங்களா? கார் வாங்குவதற்கு முன்பு டாடா நிறுவன கார்களின் பாதுகாப்பு சோதனை முடிவுகளை இங்கே தெரிஞ்சுக்கோங்க.
இந்தியாவில் தற்போது விற்பனையில உள்ள கார்களில் பெரும்பாலானவை என்சிஏபில மோதல் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கார்கள் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவங்களுக்கும், குழந்தைகளுக்கும் முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. நீங்கள் ஒரு டாடா கார் வாங்க திட்டமிட்டுருந்தால், அதனைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.
டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் ஈவிக்குப் பிறகு, நெக்ஸானின் (ஐசிஇ) மோதல் சோதனையும் நடத்தப்பட்டு, 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 32.00-ல் 29.41 புள்ளிகள் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கு 49.00-ல் 43.83 புள்ளிகள் கிடைத்துள்ளது.
டாடா ஹாரியர்
இந்த எஸ்யூவி 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவங்களோட பாதுகாப்புக்கு 32.00-ல் 30.08 புள்ளிகள் கிடைச்சிருக்கு. குழந்தைகளோட பாதுகாப்புக்கு 49.00-ல் 44.54 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதோட பாதுகாப்பு ஸ்கோர் டாடா சஃபாரி மாதிரிதான் இருக்கிறது.
டாடா சஃபாரி
டாடாவோட போர்ட்ஃபோலியோவில் இடம்பெற்றுள்ள ஆடம்பரமான, பிரீமியம் மாடல்களில் ஒன்று சஃபாரி எஸ்யூவி. பாரத் என்சிஏபி மோதல் சோதனையில் இந்த எஸ்யூவி 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 32.00-ல் 30.08 புள்ளிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு 49.00-ல் 44.54 புள்ளிகள் கிடைத்துள்ளது.
டாடா நெக்ஸான் ஈவி
கர்வ் ஈவி வருவதற்கு முன்பு, நெக்ஸான் ஈவி டாடாவோட மின்சார வாகன போர்ட்ஃபோலியோவில் முன்னணி மாடலா இருந்தது. இந்த மின்சார கார் மோதல் சோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 32.00-ல் 29.86 புள்ளிகளும், குழந்தைகளின் பாதுகாப்புக்கு 49.00-ல் 44.95 புள்ளிகளும் பெற்றுள்ளது.
டாடா கர்வ் ஈவி
டாடாவோட மின்சார போர்ட்ஃபோலியோவில் புதிய மாடல் கர்வ் ஈவி. சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மின்சார எஸ்யூவி இந்திய என்சிஏபில 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. டாடாவோட முதல் எஸ்யூவி கூப் இதுதான். பெரியவர்களின் பாதுகாப்புக்கு 32.00-ல் 30.81 புள்ளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு 49.00-ல் 44.83 புள்ளிகள் கொண்டுள்ளது.
டாடா பஞ்ச் ஈவி
டாடாவோட அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று பஞ்ச். கடந்த 5-6 மாதங்களாக முதலிடத்தில் இருக்கு. பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. பெரியவர்களின் பாதுகாப்புக்கு 32.00-ல் 31.46 புள்ளிகள் கிடைத்துள்ளது. அமேலும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு 49.00-ல் 45.00 புள்ளிகள் கிடைத்துள்ளது.
டாடா கர்வ்
டாடா கர்வ் ஐசிஇ பதிப்பு இந்திய என்சிஏபில 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் சிட்ரோன் பசால்ட்டுடன் போட்டியிடுகிறது. இரண்டும் எஸ்யூவி கூப்பேக்கள் ஆகும். பெரியவர்களின் பாதுகாப்புக்கு 32.00-ல் 29.50 புள்ளிகள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு 49.00-ல் 43.66 புள்ளிகள் பெற்றுள்ளது.
டாடா நானோவை விடுங்க.. இந்த எலக்ட்ரிக் கார் ரூ.3 லட்சத்தை விட கம்மி தாங்க!