எம்ஜி மோட்டார் இந்தியா சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரும் எம்9-உம் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டன. இந்த வருடம் முதல் பாதியில மார்க்கெட்டுக்கு வர வாய்ப்புள்ள இந்த காருக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சீன வாகன உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் புது மாடல்களைக் காட்சிக்கு அறிமுகப்படுத்தியது. இதில் மிகவும் ஸ்பெஷலானது சைபர்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் காரும் ஒரு எலக்ட்ரிக் கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் காரும்தான். இந்த 2 கார்களும் இந்த வருடம் முதல் பாதியில சந்தையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சைபர்ஸ்டரும் எம்9-உம் பிராண்டின் புது பிரீமியம் ரீடெய்ல் நெட்வொர்க்கான எம்ஜி செலக்ட் வழியா விப்பாங்க. லான்ச் பண்றதுக்கு முன்னாடி, எம்ஜி இந்தியால இருக்குற 12 டீலர் பார்ட்னர்களோட அக்ரிமெண்ட் சைன் பண்ணிருக்காங்க.
இப்போ எம்ஜி சைபர்ஸ்டரும் எம்9-உம் முன்கூட்டியே புக் பண்ணலாம். எம்ஜி எம்9-ல 90kWh பேட்டரி பேக் இருக்கு. இதுல 245 bhp பவரையும் 350 Nm டார்க்கையும் இந்த எம்பிவி-ல எடுக்க முடியும். ஒரு சார்ஜ்ல ஏறக்குறைய 430 கிலோமீட்டர் வரைக்கும் இந்த எலக்ட்ரிக் வண்டில போகலாம். இந்த எலக்ட்ரிக் வண்டியோட எக்ஸ்-ஷோரூம் விலை 65 லட்சம் ரூபாயா இருக்கும்னு எதிர்பார்க்குறாங்க.
டூயல் சன்ரூஃப் செட்டப், வென்டிலேட்டட் சீட்ஸ், பவர்டு ஸ்லைடிங் ரியர் டோர், ரியர் என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் இதெல்லாம் எம்ஜி எம்9-ல இருக்குற ஸ்பெஷல் வசதிகள். இதுக்கு மேல, ட்ரிபிள்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், ADAS, 360-டிகிரி கேமரா, ஈஎஸ்பி, ஆட்டோ ஹோல்டு, டிபிஎம்எஸ் இதெல்லாமும் இந்த ஈவியோட ஸ்பெஷல் அம்சங்கள்.
அதே நேரத்துல எம்ஜி சைபர்ஸ்டர் ஜிடி-ல 510 பிஎச்பி பவரையும் 725 என்எம் பீக் டார்க்கையும் எடுக்க முடியுற மாதிரி டூயல்-மோட்டார் கான்பிகரேஷன் இருக்கு. இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வெறும் 3.2 செகண்ட்ல ஜீரோல இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை தொடும். ஃபுல்லா சார்ஜ் பண்ணா 443 கிலோமீட்டர் வரைக்கும் இந்த எலக்ட்ரிக் கார்ல போகலாம்.
