எல்லாருக்கும் ஏற்ற மெர்சிடிஸ்-பென்ஸ்! கம்மி விலையில் 560 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி!
EQA எலெக்ட்ரிக் எஸ்யூவி மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிகச்சிறிய மற்றும் மலிவு விலை மின்சார எஸ்யூவி காராகவும் உள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட GLA காரின் எலெக்ட்ரிக் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இப்போது தனது EQA எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்திருக்கிறது. EQB 7-சீட்டர் எஸ்யூவி, EQS லிமோசின் மற்றும் EQE எஸ்யூவி ஆகியவற்றைத் தொடர்ந்து மெர்சிடிஸ் வெளியிடும் நான்காவது மின்சார இதுவாகும்.
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா (Mercedes-Benz India) நிறுவனம் EQA எலக்ட்ரிக் எஸ்யூவி காரை ரூ.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. EQA 250+ என்ற பெயரில் ஒரே ஒரு வேரியண்டில் கிடைக்கும் இந்த கார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 560 கிமீ வரை செல்லும் ரேஞ்ச் கொண்டுள்ளது.
EQA எலெக்ட்ரிக் எஸ்யூவி மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மிகச்சிறிய மற்றும் மலிவு விலை மின்சார எஸ்யூவி காராகவும் உள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட GLA காரின் எலெக்ட்ரிக் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் நான்கு மின்சார கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. EQB 7-சீட்டர் எஸ்யூவி, EQS லிமோசின் மற்றும் EQE எஸ்யூவி ஆகியவை ஏற்கெனவே விற்பனையில் உள்ளன.
இதைப்பற்றி மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ சந்தோஷ் ஐயர் கூறுகையில், “ஸ்போர்ட்டி மற்றும் டைனமிக் எலெக்ட்ரிக் கார்களை விரும்பும் இளம் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு EQA மற்றும் EQB கார்களைக் கொண்டுவந்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்
EQA காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. புக் செய்தவர்களுக்கு 2024 இன் இறுதியில் அல்லது 2025 இன் தொடக்கத்தில் கார் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மேபேக் EQS EV மற்றும் எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் எனப்படும் ஜெலண்டேவாகன் ஆகிய இரண்டு மின்சார கார்களை 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.