என்னது இத்தனையா? ஒரே சமயத்தில் அதிக கார்களை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த நபர்..!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கின்னஸ் உலக சாதனை தின கொண்டாட்டத்தின் போது இந்த சாதனையை நிகழ்த்த ட்ராய் கான்லி மக்னுசன் முயற்சி செய்தார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் அதிக கார்களை ஒன்றாக கட்டி தனது பற்களால் இழுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார். கின்னஸ் சாதனை படைத்ததை அடுத்து இவர் கார்களை இழுக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதனை கின்னஸ் வொர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பக்கம் பகிர்ந்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: கிராஷ் டெஸ்டில் இத்தனை புள்ளிகள் தானா? பயனர்களுக்கு ஷாக் கொடுத்த் பிஎம்டபிள்யூ i4..!
ஆஸ்திரேலியாவை அடுத்த பேங்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் ட்ராய் கான்லி மக்னுசன். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி அன்று ஐந்து எஸ்.யு.வி. கார்களை ஒன்றாக கட்டி அவற்றை தனது பற்களால் இழுத்து இருக்கிறார். இவரின் சாதனை வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்ட கின்னஸ் வொர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அதன் தலைப்பில், “பற்களால் அதிக கார்களை இழுத்தவர் (ஆண்) 5, ட்ராய் கான்லி-மக்னுசன்,” என குறிப்பிட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மாருதியின் முதல் Mid-Size எஸ்.யு.வி. - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
சாதனை முயற்சி:
வீடியோ காட்சிகளின் படி ஐந்து கார்களின் முன்புறம் மற்றும் பின்பக்கங்களில் கயிறுகளால் இணைக்கப்பட்டு இருக்கிறது. பின் ட்ராய் கான்சி மக்னுசன் முதல் காரில் இணைக்கப்பட்ட கயிற்றை தனது பற்களால் கடித்தவாறு சற்றே பின் சென்று, முழு சக்தியை தனது வாய்க்கு கொண்டு வந்த படி முன்னோக்கி நடக்கிறார். இவ்வாறு அவரால் அனைத்து கார்களையும் இழுக்க முடிகிறது.
இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் டூ-வீலர் உருவாக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ் - எப்போ வெளியீடு தெரியுமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கின்னஸ் உலக சாதனை தின கொண்டாட்டத்தின் போது இந்த சாதனையை நிகழ்த்த ட்ராய் கான்லி மக்னுசன் முயற்சி செய்தார். இந்த சாதனை மட்டும் இன்றி இவர் பல்வேறு இதர சாதனைகளை செய்து பெருமை பெற்றவர் ஆவார். முன்னதாக இலகு ரக விமானம் ஒன்றை பற்களால் இழுத்து இருக்கிறார். மேலும் அதிக எடையை 100 அடிக்கும் மேல் பற்களால் இழுத்து புகழ் பெற்று இருக்கிறார்.
தொண்டு நிறுவனங்களுக்கு உதவி:
இவ்வாறு சாதனைகளால் கிடைக்கும் பணத்தை கொண்டு இவர் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து வருகிறார். இன்ஸ்டாவில் வெளியாகி இருக்கும் இவரின் சாதனை வீடியோ 8 ஆயிரத்திற்கும் அதிக லைக்குகளை வாரி குவித்து இருக்கிறது. மேலும் இதனை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். இவரின் சாதனைக்கு பலரும் கமெண்ட்களில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.