புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓவின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் வர வாய்ப்பு உள்ளது. நல்ல வடிவமைப்பு மற்றும் 400 கி.மீ தூரம் செல்லும் இந்த கார் 10 லட்சத்தில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அதிகமான நிறுவனங்கள் புதிய மின்சார வாகனங்களை களம் இறக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான மஹிந்திரா நிறுவனமும் அவர்களின் XUV 3XO காரின் எலக்ட்ரிக் வெர்ஷனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். டெஸ்டிங்கில் இந்த கார் பலமுறை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதன் வடிவமைப்பு, ரேஞ்ச் தொடர்பாக பார்க்கலாம் வாங்க.
டெஸ்டிங்ல பார்த்தப்போ XUV 3XO வண்டியோட டிசைன் அப்படியே ஐசிஇ வெர்ஷன் மாதிரியே இருக்கு. இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்ல எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், சி ஷேப்ல எல்இடி டிஆர்எல், கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ் எல்லாம் இருக்கு. இதோட ஸ்பெஷல் என்னன்னா வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இருக்குற 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொடுத்திருக்காங்க.
உள்ள சில மெட்டீரியல்ஸ்ல சின்ன சின்ன மாற்றங்கள் இருக்கலாம். அது கூடவே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் இதெல்லாம் எலக்ட்ரிக் கார்ல வர சான்ஸ் இருக்கு. பெட்ரோல் வெர்ஷனை பத்தி சொல்லணும்னா இது ஒரு அஞ்சு சீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி. இதுல 1197 சிசி -ல இருந்து 1498 சிசி வரைக்கும் இன்ஜின் ஆப்ஷன்ஸ் இருக்கு. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன்ல கிடைக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு.
இந்த எலக்ட்ரிக் காரோட முக்கியமான விஷயம் என்னன்னா அதோட டிரைவிங் ரேஞ்ச் தான். 34.5 kWH பேட்டரி பேக் கொடுத்திருக்காங்க. ஒரு சார்ஜ் போட்டா 400 கிலோமீட்டர் வரைக்கும் போகலாம்னு சொல்றாங்க. இந்த வண்டியோட எக்ஸ்-ஷோரூம் விலை 10 லட்சம் ரூபாய்க்கு இருக்கும்னு சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல மஹிந்திரா XUV 3XO எலக்ட்ரிக் வெர்ஷன் பத்தி அபிஷியலா அனௌன்ஸ் பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.
