Asianet News TamilAsianet News Tamil

டிசைனில் கலக்கும் புதிய மஹிந்திரா தார் எர்த் எடிஷன்! சில்வர் அலாய் வீல் எப்படி இருக்குன்னு பாருங்க!

தார் எர்த் எடிஷன் எல்எக்ஸ் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும், ஆரம்ப விலை ரூ.15.40 லட்சத்தில் தொடங்கி ரூ.17.60 லட்சம் வரை இருக்கும். இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Mahindra Thar Earth Edition launched at Rs 15.4 lakh sgb
Author
First Published Feb 28, 2024, 2:16 PM IST

மஹிந்திரா & மஹிந்திரா இன்று மஹிந்திரா தார் எர்த் எடிஷன் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தார் எர்த் எடிஷன் தார் பாலைவனத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதற்கு ஏற்ப டெசர்ட் ப்யூரி சாடின் மேட் பெயிண்ட் மூலம் வண்ணம் பூசப்பட்டுள்ளது என்றும் மஹிந்திரா கூறுகிறது.

தார் எர்த் எடிஷன் எல்எக்ஸ் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும், ஆரம்ப விலை ரூ.15.40 லட்சத்தில் தொடங்கி ரூ.17.60 லட்சம் வரை இருக்கும். இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, தார் டெசர்ட் எடிஷன் வழக்கமான தார் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் டெசர்ட் ப்யூரி சாடின் மேட் பெயிண்ட், பின்புற ஃபைண்டர் மற்றும் கதவுகளில் டூன்-இன்ஸ்பைர்டு டெக்கால்ஸ், பி-பில்லர்களில் எர்த் எடிஷன் பேட்ஜ், மேட் பிளாக் பேட்ஜ் மற்றும் 17 இன்ச் சில்வர் அலாய் வீல்கள் ஆகியவை பிரத்தியேகமானவை.

உளே எஸ்வியூவின் வடிவமைப்பு கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறங்களில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கதவுகளில் தார் பிராண்டிங் மற்றும் சுற்றிலும் டார்க் குரோம் ஆகியவை உள்ளன.

மேலும், ஏசி வென்ட், சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் டெசர்ட் ப்யூரி நிறத்தில் டிசைன்களைக் காணலாம். மற்றொரு சிறப்பு அம்சமாக தனித்துவமாக அலங்காரிக்கப்பட்ட VIN தகடு இந்தக் காருடன் கிடைக்கும் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன் மற்றும் பின்புற இருக்கைகளில் ஆர்ம்ரெஸ்ட்கள், சீட் விரிப்புகள் மற்றும் போன்ற பிரத்யேக கூடுதல் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

தார் எர்த் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 2.2-லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ சார்ஜ்டு டீசல் எஞ்சின் 130PS மற்றும் 300Nm டார்க் கொண்டது. 2.0-லிட்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சின் 150PS மற்றும் 320Nm டார்க் கொண்டது. இரண்டும் ஆறு-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆறு-ஸ்பீடு டார்க், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றையும் உள்ளடக்கியவை.

Follow Us:
Download App:
  • android
  • ios