Asianet News TamilAsianet News Tamil

60 கி.மீ. எலெக்ட்ரிக் ரேஞ்ச் கொடுக்கும் ஹைபிரிட் கார்! மிரட்டலாக களமிறங்கிய லம்போர்கினி உருஸ் SE!!

Lamborghini Urus SE இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது. இது லம்போர்கினியின் இரண்டாவது ஹைப்ரிட் காராகவும் உள்ளது. 

Lamborghini Urus SE launched at Rs 4.57 crore: Fastest Urus ever with 60km e-range sgb
Author
First Published Aug 11, 2024, 10:47 PM IST | Last Updated Aug 11, 2024, 10:47 PM IST

கார் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த லம்போர்கினி Urus SE கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. லம்போர்கினியின் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பான Urus SUV இன் பிளக்-இன் ஹைப்ரிட் எடிஷனாக உருவாகியுள்ள இந்த கார் ரூ.4.54 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் தற்போதுள்ள Urus S மற்றும் Urus Performante ஆகியவற்றின் வரிசையில் இந்த Urus SE இணைகிறது. இந்த மாடல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது. இது லம்போர்கினியின் இரண்டாவது ஹைப்ரிட் காராகவும் உள்ளது. இதன் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன், Urus SE உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பல வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது. 

முன்புறத்தில் நேர்த்தியான LED ஹெட்லைட்களுடன் புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் கிரில் இந்த SUVக்கு கெத்தான தோற்றத்தை அளிக்கிறது. இதன் வடிவமைப்பு முந்தைய வென்ட் மாடல்களில் இருந்து மாறுபட்டுள்ளது. பின்புறத்தில் புதிய வடிவமைப்புடன் ஸ்பாய்லர், டிஃப்பியூசர் மற்றும் ஒய்-வடிவ டெயில் விளக்குகள் உள்ளன. பக்கவாட்டில் உருஸ் எஸ்இ பைரெல்லி பி ஜீரோ டயர்களுடன் புதிய 23 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Urus SE காரின் உள்புறத்தில் லம்போர்கினியின் Revuelto இல் உள்ளதைப் போன்ற கன்ட்ரோல் மற்றும் கிராபிக்ஸ் கொண்ட பெரிய 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கிறது. முன்னால் இருக்கும் டேஷ்போர்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஹைபிரிட் அமைப்பு இதன் இரட்டை-டர்போ 4.0-லிட்டர் V8 என்ஜினுடன் ஒரு மின்சார மோட்டாரை இணைக்கிறது. இவை ஒருங்கிணைந்து 800 hp மற்றும் 950 Nm முறுக்குவிசையை உருவாக்கும். இதன் 25.9-kWh லித்தியம்-அயன் பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீக்கு தூரம் செல்லும் ரேஞ்ச் கொண்டது.

Urus SE வெறும் 3.4 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை அடையும். மணிக்கு 312 கிமீ வேகத்தில் பயணிக்கும். தற்போது உருஸ் SUV இல் உள்ள ஹைப்ரிட் பவர்டிரெய்ன் தற்போதுள்ள ஆறு டிரைவிங் போடுகளைக் கொண்டது. இதில் கூடுதலாக நான்கு புதிய EPS களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 11 வருகிறது.

வெவ்வேறு சாலைகளுக்கு ஏற்ப Strada, Sport மற்றும் Corsa போன்ற வழக்கமான முறைகள் உள்ளன. Neve, Sabbia மற்றும் Terra ஆகிய ஆஃப்-ரோடு முறைகள் இருக்கின்றன. புதிய EPS ஆப்ஷனில் EV டிரைவ், ஹைப்ரிட், பெர்ஃபாமென்ஸ் மற்றும் ரீசார்ஜ் ஆகியவை உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios