EV இல்ல.. CNGயும் இல்ல.. மாறுபட்ட எரிபொருள் கொண்ட பைக் - Kawasaki போடும் மாஸ் பிளான்!
Kawasaki Bikes : இப்பொது இருசக்கர வாகன சந்தையில் EV வாகங்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது, அதே போல CNGயும் மெல்ல மெல்ல அறிமுகமாகி வருகின்றது.
எலக்ட்ரிக் வாகனம்
எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது மட்டுமல்லாமல், புவி வெப்பமாவதை தடுக்க களமிறக்கப்பட்டது தான் எலக்ட்ரிக் வகை வாகனங்கள். இந்தியாவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்பொது எலக்ட்ரிக் வகை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெளியிட்டு வருகின்றனர். மக்களும் இப்பொது அதை பெரிய அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
ஆத்தாடி ஆத்தா.. பிஎம்டபிள்யூ சிஇ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இவ்வளவா..
உலகின் முதல் CNG பைக்
பஜாஜ் Freedom 125, இது தான் உலகில் முதல் முறையாக CNGயில் இயங்கும் பைக் ஆகும். பஜாஜ் நிறுவனம் அந்த சாதனையை படைத்துள்ளது. இந்தியாவிலும், உலக அளவிலும் கார் மற்றும் ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள் CNGயில் இயங்கி வந்தாலும், பஜாஜ் நிறுவனம் தான் முதன் முதலில் CNGயில் இயங்கும் பைக்கை அறிமுகம் செய்தது.
Hydrogen பைக்
உலக அளவில் Toyota மற்றும் Hyundai நிறுவனங்கள் ஏற்கனவே Hydrogenனில் பயணிக்கும் கார்களை விற்பனை செய்து வருகின்றது. ஆனால் இந்தியாவில் அந்த வாகனங்கள் விற்பனைக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில் பிரபல Kawasaki நிறுவனம், 2030ம் ஆண்டு வாக்கில் ஹைட்ரஜனில் இயங்கும் 998cc பைக்கை அறிமுகம் செய்ய முயன்று வருகின்றது. ஏற்கனவே சில சோதனையோட்டங்களையும் அந்த நிறுவனம் செய்துள்ளது.
என்ஜின் சிலிண்டர்களுக்குள் ஹைட்ரஜனை நேரடியாக செலுத்தும் வகையில் தான் அந்த மோட்டார் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீன நிறுவனங்கள் சிலவும் இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் 998cc என்ஜினை hydrogenஐ கொண்டு இயக்கும் முயற்சியில் Kawasaki தான் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக மைலேஜ்.. பெரிய சீட்.. ட்ரெண்டிங் அம்சங்கள்.. சுசுகி அவெனிஸ் ஸ்கூட்டரின் விலை எவ்வளவு?