பெங்களூரைச் சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தானியங்கி காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் இந்திய சாலைகளில் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த மைனஸ் ஜீரோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்தியாவின் முதல் தானியங்கி காரை உருவாக்கியுள்ளது. இந்திய சாலைகளில் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், பெங்களூரு சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை.

குறியீடுகள் இல்லாத சாலைகளிலும் பயணம்: இந்த கார் எதிரே வரும் வாகனங்களை எளிதில் கண்டறியும். திடீரென பிரேக் அடித்தால், உடனடியாக நிறுத்தும் திறன் கொண்டது. அருகில், முன்னால், பின்னால் வரும் கார்கள், பைக்குகள், பாதசாரிகள் என அனைத்தையும் உடனடியாகக் கண்டறிந்து, அதற்கேற்ப இயங்கும்.

Scroll to load tweet…

விலை உயர்ந்த அல்காரிதம், சென்சார்கள் இல்லாமல், தற்போதுள்ள AI அமைப்புகளில் இருந்து மாறுபட்ட AI மாதிரியை உருவாக்கியுள்ளது. மேலும், தரவு அல்லது உயர்-வரையறை வரைபடங்கள் இல்லாமல் சுய-மேற்பார்வை முறையில் தொழில்நுட்பத்தை உருவாக்கி பொருத்தியுள்ளது. முன்னதாக, மைனஸ் ஜீரோ நிறுவன வளாகத்திற்குள் தானியங்கி காரை சோதனை செய்திருந்தது. இந்தியாவில் தற்போது ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) L1, L2 நிலையில் உள்ளது. L2+, L2++ மற்றும் L3 தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற உள்ளதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது.

விபத்துகளைத் தடுக்கும்: உலகளவில் டெஸ்லாவின் முழு தானியங்கி கார், மெர்சிடிஸ் டிரைவ் பைலட், GM சூப்பர் க்ரூஸ் போன்றவை வளர்ந்த நாடுகளில் சாலைகளில் பயணிக்கின்றன. ஆனால், வளரும் நாடுகளில் இவை அதிகம் இல்லை. நம் நாட்டில் அதிக விபத்துகள் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தானியங்கி கார்கள் தடுக்கலாம். மைனஸ் ஜீரோ உருவாக்கியுள்ள இந்த கார், பாதுகாப்பு தொடர்பான கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.