ஹூண்டாய் நிறுவனம் Aura, i20, Grand i10 Nios மற்றும் Exter போன்ற கார்களில் 70,000 ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கிறது. இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட 2024 மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும்.

புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரம். 70,000 ரூபாய் வரை தள்ளுபடியில் கார் வாங்க அருமையான வாய்ப்பு. ஹூண்டாய் நிறுவனம் தனது பழைய மாடல்களில் சிறப்பான தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சலுகைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 2024 மாடல்களுக்கு மட்டுமே. Aura, i20, Grand i10 Nios மற்றும் Exter ஆகியவை இதில் அடங்கும். எந்த காரில் எவ்வளவு தள்ளுபடி என்பதைப் பார்ப்போம்...

1. Hyundai Exter 

ஹூண்டாயின் entry level SUV எக்ஸ்டர், டாடா பஞ்சிற்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகமானது. கடந்த ஆண்டு இந்த மாடல் சந்தைக்கு வந்தது. தற்போது இந்த காரில் 40,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த காரில் Grand i10 Nios மற்றும் Aura போன்ற அதே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளது. இந்த காரை CNG வடிவிலும் வாங்கலாம்.

2. Hyundai Aura 

ஹோண்டா அமேஸ் மற்றும் மாருதி டிசையருக்கு போட்டியாளரான Hyundai Aura காரிலும் அசத்தலான தள்ளுபடி சலுகை உள்ளது. இந்த காரின் 2024 மாடலில் 53,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதன் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ், கிராண்ட் i10 நிஓஸ் போன்றது. இதன் CNG வகையும் சந்தையில் கிடைக்கிறது.

3. Hyundai i20 

ஹூண்டாய் i20 நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இந்த காரில் 65,000 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. இருப்பினும், ஸ்போர்ட்டியர் N லைன் வெர்ஷனில் எந்த தள்ளுபடியும் இல்லை. Hyundai i20, Tata Altroz மற்றும் Maruti Baleno போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.

4. Hyundai Grand i10 Nios 

தள்ளுபடி பட்டியலில் நான்காவது கார் Hyundai Grand i10 Nios. இதன் 2024 மாடலை வாங்கினால் 68,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகை அதன் அனைத்து வகைகளிலும் பொருந்தும், CNG வகையும் இதில் அடங்கும். இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் வருகிறது.